கர்மாவை வெல்ல முடியுமா? / சிறப்பு கட்டுரை
ஒ ரு ஜாதகத்தின் பலனை மூன்று விஷயங்கள்தான் நிர்ணயித்துக் கொடுக்கின்றன. ஒன்று பிறந்தபோது இருக்கும் கிரக நிலைகள் . அதுதான் ஒருவரின் ஜாதகக் கட்டம். அந்தக் கட்டத்தில் அமர்ந்த கிரகங்களின் வலிமையைப் பொறுத்து அவருடைய 12 பாவங்களின் பலன்கள் நிர்ணயிக் கப்படுகின்றன. இரண்டாவது, தசா புத்திகள் . மூன்றாவது கோள்சாரம் (transit) . இந்த விஷயங்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 12 கட்டங்களும், ஒன்பது கிரகங்களும் சிறப்பாக அமைந்த ஒரு ஜாதகம் உலகத்திலேயே கிடையாது. தசரதனின் பிள்ளையாகப் பிறந்த ஸ்ரீ ராமன்தான் 12 ஆண்டுகள் காட்டிலும் மேட்டிலும் அலைந்து படாத பாடுபட்டான். மனைவியைப் பிரிந்து தவித்தான். தெய்வ ஜாதகங்களுக்கு கிரகபலனா? என்று இவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் ஜாதக அறிவியலை மட்டும்தான் பார்க்க வேண்டும். ஸ்ரீ ராமனே அவதாரம் செய்தாலும், இந்த கர்ம பூமியில் அனைத்தும் அம்சமாக அமைந்து விடுவதில்லை. 12-ஆம் இடம் பலமாக அமைந்தால் எங்கேயும் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவார்கள். அவர்களுக்குக் காற்று வேண்டியதில்லை. குளிர்சாதனம் வேண்டியதில்லை. ஆனால், நாளைய செலவுக்கு ப...
