பூரி ஜெகநாதர் கோயிலைப் போல் இன்னொரு கோயில்! / வட நாட்டுத் திருத்தலங்கள்...
ஒரிசா
மாநிலத்தின் தலைநகரமான புவனேஷ்வரம், நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட நகரம்.
இந்த நகரத்தை பற்றி பேசினாலே உடனே லிங்கராஜர் கோயில்தான் நினைவுக்கு வரும். அதே
போல், பூரி ஜெகநாதர் கோயிலும் நினைவில் வந்துபோகும். ஆனால், பலரும் அறியப்படாத
புவனேஷ்வரத்தில் ஆனந்த வாசுதேவா கோயில் ஒன்றும் இருக்கிறது. ஆனந்த வாசுதேவா
கோயிலுக்கும், பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.
பல வேற்றுமைகளும்
உண்டு. பூரியில் கர்ப்பகிரகத்தில் எப்படி, பாலபத்ரர் என்ற பலராமர், கிருஷ்ணன் என்ற
ஜெகநாதர் மற்றும் அவரின் சகோதரி சுபத்ரா ஆகியோர் காட்சித் தருகின்றார்களோ. அப்படி,
இந்த புவனேஷ்வர் ஆனந்த வாசுதேவா கோயிலிலும், இவர்கள்தான் கர்ப்பகிரகத்தில் காட்சித்
தருகின்றார்கள்.
பூரி கோயிலில், சிலைகள் மரத்தால் செய்யப்பட்டு, முழுமை இல்லாமல் நிறுத்தப் பட்டவை என்றும், அதன் பின் கூடுதல் அலங்காரங்கள் மூலம் அவற்றிற்கு முழுமை தந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஆனந்த வாசுதேவா கோயிலில், சற்று வித்தியாசமாக மூவரும் கருப்புக் கல்லால் செய்யப்பட்டு, முழுமையாக காட்சித்தருகிறார்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக