``மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்" தொடக்கவுரை:

 ``மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்" 



தொடக்கவுரை: 

மத்வ மக்களுக்கு வணக்கம்

திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி, சிந்தலவாடி ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ மத்வாச்சாரியார், ஸ்ரீ ராகவேந்திரர் ஆகியோர்களின் அனுகிரகத்தால், ``மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்" என்கின்ற பத்திரிக்கையின் முன்னோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த இதழில், மத்வர் யார்? அவர் எதற்காக அவதரித்தார்? 32 மதங்களை கண்டனம் செய்ய காரணம் என்ன? மத்வ பரம்பரையில் வந்த மகான்கள், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் மூலமாக வந்த மஹான்கள், ஸ்ரீ வியாசராஜதீர்த்தர் மூலமாக வந்த மகான்கள், இப்படியாக உடுப்பி, முல்பாகல் மடம், உத்திராஜ மடம், இன்னும் பல எண்ணற்ற மகான்களை பற்றியும், பிருந்தாவனங்களை பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள்.

மேலும், மத்வ சம்ரதாயங்கள் உதாரணமாக, நாமம் எப்படி அணிவது?, சாளக்கிராம பூஜை எப்படி செய்வது?, இப்படியாக வரலக்ஷ்மி, அனந்தவிரதம், சத்தியநாராயண பூஜை ஆகியவைகளை எப்படி செய்வது? என்பது போன்ற பல அறிய தகவல்களை இதன் மூலமாக தரவிருக்கிறோம்.


உலக முழுவதிலும் உள்ள மத்வ கோயில்கள், மடங்கள், பக்தர்கள் அறியாத இதர கோயில்கள், அந்த கோயில்களுக்கு எப்படி செல்வது? என கோயில்கள் பற்றிய தகவல்களும் தரவிருக்கிறோம்.

அடுத்ததாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக முழுவதிலும் நம் இந்து மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, தனிநபரோ நம் இந்து மதத்தை பற்றி தவறாக பேசினால், அவற்றை சுட்டிக்காட்டி கண்டனத்தையும் பதிவு செய்யும்.

ஆக, இந்த ``மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்" பக்தியையும், அரசியலையும் கலந்த ஒரு இதழாக தொடங்கப்பட்டுள்ளது. இது மளமளவென வளர்ந்து ஒரு சாட்டிலைட் சேனலாக மாறவும் இருக்கிறது. உங்களின் பேராதரவு இருந்தால்....


                                                                         நன்றி 

                                                                                                                                        உங்கள்                                                                                                                                           ஜோல்னா ரெங்கா

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Madhvachariya Tamil Magazine C.E.O

Mr.G.Raghavendran

Madhvachariya Tamil Magazine M.D & Editor

Mr.R.Rengarajan

Madhvachariya Tamil Magazine Sub - Editors

Mrs. Charumathi

Mrs. Harini

Madhvachariya Tamil Magazine Members

Mr.Anantha Padmanaban

Mr.Aswin

Mrs.Lakshmi sree

Mr.Gopi Aachar

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்