கை மேல் பலனை தந்தருளும் கையிலாயநாதர்
கை மேல் பலனை தந்தருளும் கையிலாயநாதர்

கையிலாயநாதர்
வேலூரில்
இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், அணைக்கட்டு தாலுக்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் அருள்மிகு "உமா மகேஸ்வரி உடனுறை
கைலாய நாதர்" திருக்கோவில்.
ஸ்தல வரலாறு
தற்போது பெங்களுரில், அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதியான, ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய, சித்தர் ஒடுக்கத்தூர் மகான் அவர்கள் தங்கி வழிபாடு செய்த ஆலயம்.
காலப்போக்கில் ஒடுக்கத்தூர் மகான் சென்றுவிட, வழிபாடு குன்றிய நிலையில், எம்பெருமானே ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி சிதிலமடையச் செய்துள்ளார்.
![]() |
| உற்சவர் |
இத்தலத்தின் அடியில், பல சித்தர்கள் தியானத்தில் இருக்கின்றனர். மேலும், மகாகுரு அகத்தியரும், சித்தர் காகபுஜண்ட முனியும் வந்து தங்கி செல்கின்றனர். மாணிக்கவாசகரும் இத்தலத்தில் வந்து தங்கி மனிதர்களைப் போலவே சுற்றிவருகிறார் என்று வரலாறு கூறுகிறது.
சித்தர் ராமலிங்க ஸ்வாமிகள் மற்றும் சித்தர் திவ்யமுனி ஆகிய இருவரும் இத்தலத்தின் அடியில் ஜீவசமாதி கொண்டிருக்கிறார்கள். காசிக்கு நிகரான ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. காசிக்கு சென்றால் எப்படி பாவங்கள் விலகுமோ அதுபோன்று, இத்திருத்தலத்திற்கு வந்து எம்பெருமானை தரிசித்தல் பாவங்கள் விலகும்.
கோயில் அருகில் "உத்திர காவிரி" என்னும் நதி இருக்கிறது. காசியில் இருக்கும் கங்கை நதியானது, தெற்கு புறமாக கைலாயநாதர் கோயிலை தொட்டு வடக்கு புறமாக செல்கிறது. இது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இத்தலத்தில் ரம்பைக்கும், ஊர்வசிக்கும் சாபவிமோச்சனமளித்ததாகவும் கூறப்படுகிறது.
தன் கனவில் தோன்றிய கைலாயநாதர் பற்றியும், கோவில் கட்டும்படி உத்தரவிட்டதையும் கிராம மக்களுக்கு கலைச்செல்வி தெரிவித்தார். இதனையடுத்து, ஊர் மக்களோடு இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார் கலைச்செல்வி. 15 ஆண்டு காலமாக கைலாயநாதரை பராமரித்தனர். ஊர் மக்களால், கிட்டத்தட்ட 65 லட்சம் செலவில், கோவிலின் கருவறை, விமானம் ஆகியவை அமைக்கப்பட்டது.
அருள்மிகு
உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர்,
திருக்கோவில்,
A/C No:6655846738,
IFSC CODE:IDIB000O001,Indian Bank-Odugathur Branch
Bank Account Name: Arulmigu Umamaheswari Udanurai
Kailayanathar Temple Trust.
Phone Pay and Google Pay Number:8695875868
முகவரி:
அருள்மிகு
உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர்,
திருக்கோவில்,
பாக்கம்
வில்லேஜ்,
பாக்கம்
பாளையம் போஸ்ட்,
குருவராஜா
பாளையம் (வழி),
அணைக்கட்டு
தாலுக்கா,
வேலூர்
மாவட்டம்-632107
செல்:8695875868, 9345883326
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)





கருத்துகள்
கருத்துரையிடுக