ஆயிரம் தடுப்பூசிக்கு சமானம் / A2 சாணம் கிருமி நாசினி!


ந்த நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டியை காய வைக்க வேண்டும்?இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

வ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, வீட்டுச் சுவரின் வெளிப்புறத்தில், வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும், கிராமப் புறங்களில் காணப் பட்டதை நாம் அறிவோம். அது ஏன் தெரியுமா? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்! மேலும் படியுங்கள்...



முன்பெல்லாம், தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம், பசுவின் வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும், ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித் தனியாக, ஒவ்வொருவர் முகத்திலும் அடிக்க முடியாது என்பதால், வீட்டுச் சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

துபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு, அந்த வீடே அணுக் கதிர்கள்கூட துளைக்க முடியாத, ஒரு அரணாக மாறிப் போகும். ஆனால், இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே, சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம், கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி, சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில், 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர், அவற்றின் மகிமையைப் புரிந்துக் கொண்டுதான், தற்போது வறட்டியை அதிகளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர்!

 னால், நாமோ, பகுத்தறிவு என்று நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்து கொள்ளாமல், கேலி செய்து கேவலப் படுத்துகிறோம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இப்போது நாம் பேசும் பகுத்தறிவு, அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது. நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப் படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தது, அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்.

தேதி: 13.07.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்