சகல பாவங்களையும் போக்கும் சாளக்கிராம பூஜை!

𖤐 சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

𖤐 சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தைகூட போக்க வல்லது.

𖤐 சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும். 

𖤐 பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

𖤐 சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை

𖤐 சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் செய்து பூஜையினை செய்பவர்கள், விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

𖤐 சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...! அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

𖤐 சாளக்கிராமம் - பகவான் இருக்குமிடம். சர்வ பாபங்களையும் நாசம் செய்யவல்லது.

𖤐 பாபங்கள் செய்தவர்கள்கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

𖤐 அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட,  ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

𖤐 சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும், பூதானமும் செய்த பலன்.

𖤐 இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

𖤐  பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால், பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை, பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

𖤐 காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சாளக்கிராம பூஜையினால் முக்திபெறுவான்.

𖤐 தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

𖤐 சாளக்கிராம தீர்த்தத்தாலே, சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

𖤐 பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமமாகியிருந்து அருள்பாலிக்கின்றனர்.

𖤐 விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

𖤐  சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

𖤐 பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

𖤐 ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.


தேதி: 30.10.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்