இது தேவையா? / பிராமண மக்களுக்கு வேலைய கொடுங்கய்யா...

ணக்கம்,

நம் பிராமண சமுதாயத்தின் மிக பெரிய குறைபாடுகள் என்னவென்றால், பிராமண ஆட்களுக்கு வேலைவாய்ப்பினை தராமல் பிற ஆட்களுக்கு வழங்குவதுதான். உதாரணத்திற்கு; வங்கி, ஆசிரியர், மற்றும் இதர தனியார் நிறுவனங்களில், உயர் பதவியில் இருக்கும் பிராமண நபர்கள், அவர்கள் பணிபுரியும் இடத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒரு பிராமண ஆட்களை பரிந்துரைப்பதில்லை. மாறாக, இதர நபர்களை பரிந்துரை செய்து வருகிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், யானை யானது தனக்கு தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்ளுமே.. அதுபோல உள்ளது. தற்போது நான் சொல்லும் சுவாரஸ்ய சம்பவத்தை படியுங்கள்;

நேற்றைய தினம் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் நாகேஷ்வர சாலை வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது ஒரு பேனரை பார்த்தேன். அதில், சரிவர ஊதியம் வழங்க வில்லை உள்ளிட்ட கண்டன வாக்கியத்தை அடங்கிய LTUC என்று சொல்லக் கூடிய தொழில்சங்க பேனரது. அதை கண்டதும் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். காரணம், தொழில் சங்க பேனரைக் கண்டு அல்ல. அது வைக்கப்பட்ட இடத்தைக் கண்டும், அந்த கண்டன வாசகங்கள் யாருக்கானது என்பதை கண்டதும்தான் எனக்கு பெரும் அதிர்ச்சியே!

இத்தகைய வாசகங்களுடன் கூடிய பேனர் வைத்த இடம்; நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ``காஞ்சி காமக் கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை".

இந்த மருத்துவமனைக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்ததும், நமக்குள் எண்ணற்ற பல கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகள் அனைத்தும் ``காஞ்சி காமக் கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை". நோக்கியே!

1) ஒரு தொழில் சங்கம் என்ற பெயரில் மருத்துவமனையின் வெளியே இத்தகைய பேனர்களை ஏன் அனுமதித்தீகள்? அல்லது தொழில் சங்க ஆட்களை ஏன் வளரவிட்டீர்கள்?

2) இது ஒரு தனியார் மருத்துவமனை. அதுவும் அறக்கட்டளை மூலமாக செயல்பட்டு வருகிறது. பிரச்சனைகளை செய்யும் நபர்களை டிஸ்மிஸ்ட் செய்யவேண்டாமா? யாருக்காக பயம்? நம்மிடையே எத்தனையோ வழக்கறிஞர்கள் இருக்கும்போது எதற்காக பயம்? சட்டப்படி அணுகலாமே.

3) இங்கு சாதியை பேசித்தான் ஆக வேண்டும். எத்தனையோ பிராமணர்கள் வேலையின்றி தவித்து வருகின்றார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்காது, யாருக்கோ வேலை தந்த வினை இது என்று சொல்வதைவிட, பிராமணர்களின் வைத்தெரிச்சல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பிராமண சமுதாயத்திற்கு நீங்கள் வேலை கொடுத்தால், அவர் பயபக்தியோடு, பெரியவாக்கு விஸ்வாசியாக இருந்து இத்தகைய போராட்டங்களையெல்லாம் செய்யாது நன்றியோடு இருந்திருப்பார். செய்தீர்கலா?

4) யார் யாரையோ வேளையில் அமர்த்தி, யானை தனக்கு தானே பண்ணை வாரிக்கொள்ளுமே, அதுபோல், செய்துவிட்டீர்கள்.

இது சம்மந்தமாக பத்திரிகையாளன் என்ற முறையில், மருத்துவமனைக்கு என்ன பிரச்னை என்று விசாரிக்க சென்றேன். ஆனால், மருத்துவமனை உள்ளேகூட அனுமதிக்கவில்லை. இதையெல்லாம் மீறி ஒரேயொரு மருத்துவ நிர்வாகியை சந்தித்தேன். அவரும் சரிவர பதில் கூறவில்லை. 

மூச்சுக்கு முந்நூறு தடவை ``பிராமணர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்'' என்று சொல்கிறார்கள். தலைமையே தவறுகளை செய்தால், என்ன செய்வது? ஒற்றுமை என்பது கீழ் மட்டத்தில் இருந்து தொடங்குவதல்ல. மேல் மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

இந்த ஒற்றுமை சீர்குலைவு இங்கு மட்டுமல்ல; ஒரு முறை நான் கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு சென்றிருந்தேன். அங்கு, உடுப்பி கோயில் சார்பாக  செக்யூரிட்டி பணியாளர்கள் விடிய விடிய சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்கள். இவர்களின் வேலை, கோயிலை கண்காணிப்பது, விழா காலங்களில் ஸ்வாமிஜிக்கு பந்தோபஸ் செய்வது என்று உயர் அதிகாரிகள் சொல்லும் வேலைகளை செய்வது. இதை, ஒரு பிராமணன் செய்யமாட்டானா? ஏன் பிற நபர்கள்?

அதே போல், ஆன்மிக சேனலான ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் கிறித்தவர்கள் வேலை செய்கிறார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அந்த தொலைக்காட்சியில் வரும் ``பஜன் சாம்ராட்'' என்னும் பிரபலமான நிகழ்ச்சியினை படம் பிடிக்கும் கேமரா மேன் ஒரு கிறித்துவர். அந்த கேமரா மேன், இந்த நிகழ்ச்சியை கிண்டலும், கேலியும் செய்கிறாராம். ஒரு நண்பர் இதனை என்னிடம்கூறி வருத்தமடைந்தார். தற்போது சங்கரா டிவி, விஜய் டிவிக்கு மாறியதாக கேள்வி.... இவைகள் எல்லாம் சொல்லும்போது, ஒரே ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்பார்கள். qualification....!

அந்த பிராமண நபருக்கு training கொடுங்கள். அவனை ஊக்கப்படுத்துங்கள். பிராமண உயர் அதிகாரிகளே... பிராமண தொழில் அதிபர்களே.... உங்கள் நிறுவனங்களில் ஒரு பிராமணன் வேலை செய்வதற்கு எந்த தகுதிகளையும் நிர்ணயம் செய்யாதீர்கள். உங்கள் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஒரே தகுதி, `அவன் பிராமணன்' அது போதும். அந்த முடிவுக்கு வாருங்கள். இல்லையெனில் இதுபோல் சிக்கல்களில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

 - ஆசிரியர்.

தேதி: 03.06.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்