ஒரே ராசி, ஒரே லக்னம் உள்ள ஜாதகம் பொருந்தாதா? ஏன்? / கேள்வி - பதில்கள்

- பத்ரிநாத், நங்கநல்லூர்

து தவறான கருத்து. ஒரே ராசி, ஒரே லக்னம் உள்ள ஜாதகம் நன்றாக பொருந்தும். ராசி என்பது உடலையும் லக்னம் என்பது உயிரையும் குறிக்கும். ஒருவருடைய ராசி என்பது மற்றவருக்கு லக்னமாக இருந்தால் தம்பதியர் உயிரும் உடலுமாக ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பதே நிஜம். இதுபோன்ற அமைப்பு இருந்தால் தாராளமாக திருமணத்தை நடத்தலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சந்திராஷ்டம தினத்தன்று கைபேசியில் செல்ஃபி எடுத்துக் கொண்டால் பரிகாரம் என்று கூறுகிறார்கள். முன்பெல்லாம் கைபேசி கிடையாதே? மேலும் இன்று பரிகாரமும் ஹைடெக் ஆகிவிட்டதே, உங்களின் கருத்து..?
  - கோ.பிரேம், திருச்சி.

துபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய சாஸ்திரம் வலியுறுத்தும் விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது. சந்திராஷ்டம நாள்தான் என்றில்லை, தினமும் காலையில் எழும்போதே தன்னுடைய முகத்தை தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாம் அல்லது தனது உள்ளங்கைகளை பார்த்துக் கொண்டாலே போதுமானது. அன்றைய பொழுதானது நல்லபடியாகவே செல்லும். தூங்கி எழுந்தவுடன் காணத் தக்கவை என்று ஒரு சில விஷயங்களை நம்முடைய சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதைப் பின்பற்றி வந்தாலே போதுமானது. சந்திராஷ்டம நாளும் நமக்கு வெற்றியைத் தருவதாகவே அமையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 31.10.2025   

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்