மகுடமிடும் வாசகர்கள் / கடிதங்கள்
- ஜி.எஸ்.ரகுநாதன், திருச்சி.
ஒரிசா மாநிலம் பூரி கோயிலுக்கு பல முறை நான் என் மகனுடன் சென்றிருக்கிறேன். ஆனால், பூரி ஜெகந்நாதருக்கு ஏன் பெரிய கண்கள் இருக்கிறது? என்பதை பற்றி சிந்திக்கவே இல்லை. தற்போது அதன் விளக்கத்தை இந்த கட்டுரையின் மூலமாக தெரிந்துக்கொண்டேன். அதற்கு நன்றியும், பாராட்டுக்களும்.
- வி.வித்யா ராஜநாராயணன், மதுரை.
ஒரு ஆன்மீக இணையதள இதழில், அரசியலை பற்றியும் பேசுவது புதுமையாக இருக்கிறது. அதுவும் ஒரு மத்வ சம்ரதாய இதழில் இதுதான் முதல் முறை என்று நான் நினைக்கிறன். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டினை விதித்திருந்தது. இதனை எதிர்த்து, ஆசிரியர் பகுதியில் ``பட்டாசு வெடிக்க தமிழகத்தில் கட்டுப்பாடா?" என்கின்ற தலைப்பில் இதழாசிரியர் கடுமையாக அரசை எதிர்த்து சாடியுள்ளார். பாராட்டுக்கள். தொடந்து இது போல் நல்ல கட்டுரைகளை வழங்க வேண்டுகிறேன்.
- கோபாலகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்.
கும்பகோணம் மஹான் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரை பற்றிய கட்டுரை மிக அருமையாக இருந்தது. பல விஷயங்களை படித்து தெரிந்துகொண்டேன். அதே போல், ``மகத்துவம் மிக்க மத்வ மஹான்'' பகுதிக்கும் நான் மிக பெரிய ரசிகை!
- ஸ்ரீலேகா ரகோத்தமன், பாண்டிசேரி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 24.2.2026
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள்
கருத்துரையிடுக