ஆன்மீகத்தில் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது..... / ஆன்மீக தகவல்கள்


🏵️ பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

🏵️வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

🏵️திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

🏵️அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.


🏵️ கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

🏵️எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

🏵️ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. 

🏵️மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.


🏵️சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

🏵️நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

🏵️திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால், அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

🏵️கோயில் மூடியிருக்கும் போதும், அபிஷேகம் நடைபெரும் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.


🏵️குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

🏵️விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

🏵️ பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

🏵️செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக் கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.


🏵️இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

🏵️கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

🏵️விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவபிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

🏵️ காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை தரும் என்பது சாஸ்திரம் நெறியாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 09.2.2026   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்