இந்தியா இந்து நாடு என்பதில் என்னதான் தயக்கம்??? / சிறப்புக் கட்டுரை


* ஜெருசலேம் யூதனுக்கானது, வாடிகன் கிறிஸ்துவனுக்கானது, லாசா புத்தமதத்துகானது. மெக்காவும் மதீனாவும் இருக்கும் சவுதி இஸ்லாமிய சாம்ராஜ்யம், அவர்களுக்கு தாய்வீடு. நிச்சயமான இஸ்லாமிய பூமி. ஆனால் காசியும், கங்கையும் ராமேஸ்வரமும், பூரியும் இன்னும் ஏகபட்ட புண்ணிய சேத்திரங்கள் இருக்கும் இந்த இந்து திருநாடு சமய சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமாம்!

* உலகில் கிறிஸ்தவ நாடுகளை எண்ண இரு கை போதாது, இஸ்லாமிய நாடுகளும் ஏராளம். புத்தநாடு என சில நாடுகள் உண்டு, யூதநாடு என இஸ்ரேலும் போராடி வந்துவிட்டது. கிறிஸ்தவ நாடுகளில்கூட கத்தோலிக்கம், பிரிவினை கோஷ்டி தனி தனி நாடுகளை கொண்டிருக்கின்றது, ஷியா சன்னி பிரிவுகளும் அப்படியே. நிறைய தேசங்கள் உண்டு. ஆனால் இந்துநாடு என ஒன்றே ஒன்று அமைய‌, அதற்கு காரணமும் அடையாளமும் கேந்திரங்களும் 90 கோடி மக்களும் இருக்க, அப்படி ஒன்று அமைய கூடாது என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிக பெரும் அதர்மம்.


இவர்கள் நோக்கம் என்ன?

* உலகின் தொன்மையான மதங்களை எல்லாம் அழித்தார்கள். ரோமை மதம் ஒழிந்தது, கிரேக்க மதம் புதைக்கபட்டது, இன்னும் எதெல்லாமோ இஸ்லாமாலும் கிறிஸ்தவத்தாலும் விழுங்கபட்டது. புத்தமதத்தை இலங்கையும் மியன்மாரும் காத்தன. அதை தரித்திர நாடாக்கினீர்கள், கம்யூனிசம் என சொல்லி புத்தமதத்தை ஓரளவு காத்தது சீனா, இல்லையேல் அம்மதம் விழுங்கபட்டிருக்கும். ஜப்பான் அணுகுண்டை தாங்கியும் வளர்ந்தது புத்தமதமும் அங்கு காக்கபட்டது.

* இந்து மதம், இந்த திருநாட்டை தவிர எங்கு உண்டு, எங்கு வாழமுடியும்?பாசுமதி அரிசி இமயமலை நதிகளில் கரையில் மட்டும் வளரமுடியும் என்பது போல, சந்தணமரம் கன்னட காடுகளில் மட்டும் வளரமுடியும், மிளகு கேரளத்தில் மட்டும் விளையும் என்பது போல இந்து மதம் இங்கு மட்டும்தான் வாழமுடியும்.

அது வாழ்ந்துவிட்டு போவதில் இது இந்து நாடு என்பதில் என்னதான் தயக்கம்?

பூமிபந்தில் எல்லா மதங்களுக்கும் நாடு உண்டு, இந்துக்களுக்கு மட்டும் இருக்க கூடாது என்பது எவ்வகை நியாயம்?

முன்னோர்களின் பூமி அல்ல, முன்னோர்களின் மதமும் விளங்க கூடாது அடையாளம் பெற கூடாது என கருதுவது எவ்வகை வன்மம்?

முன்னோர் வணங்கிய மதமென கொஞ்சமேனும் நன்றிகடன் வேண்டாமா?

எவ்வளவு கஷ்டம் சிரமம் நெருக்கடி வந்தாலும் முன்னோர் வணங்கிய மதத்தைவிட்டு போகமாட்டோம் என உறுதியாய் பின்பற்றி இன்று வளர்ந்து நிற்கின்றது யூத இனம்.

ஆம்.. முன்னோர்கள் மேலும் அவர்கள் மதம் மேலும் அவர்கள் வைத்திருக்கும் பற்று அப்படி, அந்த முன்னோர்களின் ஆசிதான் அவர்களை இப்படி உயர்த்தியிருக்கின்றதன்றி வேறல்ல...


மிக குறுகிய சுயநலத்திற்காக மிகபெரும் அடையாளம் ஒன்றை, ஒரு ஞான கருவூலத்தை, உலகில் இந்தியா தவிர எங்கும் உரிமையும் பெருமையும் கொண்டாடமுடியாத இந்துமதத்தை அழிக்க நினைப்பது பெரும் பாவம், அது இந்த பூமியினை தவிர எங்கும் காக்கமுடியாத பொக்கிஷம், இம்மண்ணுக்கு உரித்தானது, அது வாழவேண்டும்.

* பரந்த இந்தியாவினை மூன்றாக உடைத்தபின்பும் வீம்புக்கு இது சமயசார்பற்ற நாடு என சொல்லிகொண்டிருப்பது எப்படி?

* ஒரு நாட்டின் அரசமதம் என ஒரு மதத்தை அறிவிப்பது அம்மதத்தை காக்க அன்றி வேறல்ல‌ எல்லா நாடும் பெரும்பான்மை மக்கள் எம்மதம் பின்பற்றுகின்றார்களோ அதை அரசமதமாக அறிவித்து அல்லது அரசனின் மதமாக அறிவித்து காக்கின்றன‌. இங்குமட்டும அது நடக்க கூடாது என்றால் அது எவ்வகை நியாயம்?

உலகை சுற்றி பாருங்கள், மனசாட்சியினை கேளுங்கள், அது உங்களுக்கு பதில் சொல்லும்!

நன்றி: பாரத ஹிந்து கட்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 04.2.2026   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்