வேண்டியதை தந்தருளும் தந்தம் விநாயகர்

 

வேண்டியதை தந்தருளும் தந்தம் விநாயகர் 

கோயிலின் முகப்பு 

நாம் எந்த ஒரு நல்ல காரியங்களை செய்தாலும், முதன்மை கடவுளான விநாயகரை வழிபடவேண்டும். அப்படி வழிபடும்போது நிச்சயமாக காரிய தடைகளின்றி சித்தியாகும். என்பது பெரியோர்களின் வாக்கு.

மனதில் கணநாதனை நினைத்தாலே போதும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். இருப்பிலும், நேரடியாக சென்று தரிசிப்பதை போல் வராதல்லவா!

கும்பக்கோணம் மாவட்டத்தை, கோயில் நகரம் என்றே அழைக்கிறோம். கும்பக்கோணம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில்  ஏகப்பட்ட கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

அப்படி ஒரு புகழ் பெற்ற கோயில் மட்டுமல்லாது, காரிய சித்திக்கும் ஏற்ற கோயில், கும்பக்கோணத்தில் உள்ள பகவத் விநாயகர் கோயில். 

இந்த விநாயகர், இரண்டு பெரிய யானையின் தந்தத்தின் நடுவில் மிகவும் அழகாக அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். அதனால், இவருக்கு தந்தம் விநாயகர் என்னும் பெயரும் உண்டு.

வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, ``நாகேஸ்வர சுவாமித் திருமஞ்சன வீதியில் உள்ள இந்த  விநாயகர் , பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது என்றும், பவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று என்றும், புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்றும்,  புத்தர் கோயில்கள் பலவும்  பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாகக்கப்பட்டன என்றும், இங்குள்ள விநாயகர் கோயிலுள் உள்ள புத்தர் உருவம் இதற்குச் சான்றாகும் என்றும் கூறினார்.

பகவத் விநாயகர்

இக்கோயிலில் மயிலை சீனி.வேங்கடசாமி கூறிய புத்தர் சிலை காணப்படவில்லை. அங்குள்ள சிலை பகவத் அல்லது பகவ முனிவர் என்பவருடைய சிலையாகும். புத்தர் சிலைக்குரிய கூறுகள் சிலையில் காணப்படவில்லை. என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியோ... சக்தி வாய்ந்த விநாயகர். வேண்டியதை அருள்பாலிக்கிறார். மனது அமைதி பெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

 2016-ல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின் காரணமாக இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில், நாகேஸ்வரர் சுவாமித் திருமஞ்சன வீதியில் உள்ளது. இக்கோயிலை பகவத் விநாயகர் கோயில் என்றும் பகவ விநாயகர் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்