வேப்பம் பூமாலை எதற்கு?

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகத்தில் வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும், சிலர் கவனித்தும் இருக்க மாட்டீர்கள், சிலர் அம்மன் தெய்வம் அதனால் வேப்பம்பூ என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அதில் பாண்டியர் வரலாறு உள்ளது...!

பலவகை வாசனை மலர்கள் இருக்கும்போது மதுரை மகாராணிக்கு ஏன் வேப்பம்பூ அணிவிக்கிறார்கள்...? மதுரை என்பது பாண்டிய தேசம், அன்னை தடாதகை பிராட்டியார் மலையத்துவச பாண்டியனின் மகளாக பிறந்தாள் என்பதை அறிவோம்...!

பாண்டியர்களின் அடையாளம் மீன் கொடி, வேப்பம்பூ மாலை. பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்கள் என சங்ககால நூல்கள் கூறுகின்றன...!

எனவேதான் இன்றளவும் மதுரையை ஆளும் பாண்டியநாட்டு மகாராணி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அன்று வேப்பம்பூ மாலை அணிந்து, தனது நாட்டுமக்களை காண திருவீதி உலா வருகிறாள்...!

கருத்துகள்