ஆனந்த நிலைய விமானத்தில் வேங்கடவன் / பகுதி - 2
திருப்பங்களை தந்தருளும் திருப்பதி
யாரும் அறியப்படாத திருப்பதி தகவல்கள் - 2
ஆனந்த நிலைய விமானத்தில் வேங்கடவன்
நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில், ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வெங்கடேஷ்வர ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார். கூடவே, பரம பத நாதரும் எழுந்தருளியிருக்கிறார். வருடத்தின் 365 நாட்களும் இவரை தரிசிக்கலாம். இந்த விமான தரிசனம் வைகுண்ட ஏகாதசி பலனை கொடுக்கும் என்கிறது ஆகமம்.
ஆனந்த நிலைய விமானத்தில், பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம். ஆதிசேஷனின் மேல், வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டு இருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபத நாதர் எனப்படுகிறது.
வேங்கடவனை தரிசிக்க ஏதுவாக, வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.
இந்த ஆனந்த நிலைய விமான வேங்கடவனை தரிசிக்கும் பக்தர்களிடத்தில் பிரம்மாவே பொறாமை கொள்கிறாறாம். காரணம், அவருக்கே இத்தகைய தரிசனம் கிடைக்கவில்லையாம்.
தற்போது, மூலவர் மலையப்ப ஸ்வாமியை குறுகிய நிமிடங்களித்தான் தரிசிக்க முடிகிறது. அதனால், நம் வேண்டுதல்கள் அனைத்தையும் அவரிடத்தில் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த தெரிவிக்க முடியாத வேண்டுதல்களை, ஆனந்த நிலைய விமானத்தில் ஆனந்தமாக அருளும் இந்த வேங்கடவனிடத்தில் தெரிவிக்கலாம்.
மேலும், ஆனந்த நிலையத்தில் குடிக்கொண்டுள்ள வேங்கடவனை தரிசித்த மறுநொடியே அருகில் உள்ள பரமபதநாதரையும் தரிசனம் செய்வது சிறப்பு.
இனி, திருமலைக்கு செல்வோர், ஆனந்த நிலையத்தில் இருக்கும் வேங்கடவனையும், பரமபதநாதரையும் தவறாது தரிசித்து வாருங்கள். நிச்சயம், பக்தர்களின் வேண்டுதலை தந்தருளுவான் வேங்கடவன்.
அறியப்படாத தகவல்கள் தொடரும்...
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக