வேண்டுபவருக்கு வேண்டுவதையளிக்கும் வேங்கடாசலபதி
வேண்டுபவருக்கு வேண்டுவதையளிக்கும் வேங்கடாசலபதி
![]() |
மூலவர்: ஒப்பிலியப்பன் / திருநாகேஸ்வரம் |
ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் - 29.06.2023
நூற்றெட்டு திவ்ய தேசங்களில் புகழ் பெற்றது. திருவிண்ணகர் என்றும் போற்றப்படுகிறது. இத்தலம், திருவேங்கடமென்னும் திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனைத் தலமாய் விளங்கி வருவதும் அனைவரும் அறிந்ததே.
இத்தலத்தில் என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து எம்பெருமான்களாக தரிசனம் தந்த வேங்கடாசலபதிப் பெருமாள். பக்தர்களால் மிகப் பிரியமாய் ``ஸ்ரீ ஒப்பிலியப்பன்'' என்று அழைக்கப்பட்டு, ஒரே தேவியாம் ஸ்ரீபூமிதேவியுடன் ஒரே சந்நதியில் எழுந்தருளி, வேண்டுபவருக்கு வேண்டுவதையளித்து அருள்பாலித்து வருகிறார்.
தற்போது, ஒப்பற்ற பெருமையுடன் விளங்கும் இத்திருக்கோயிலின் விமானங்கள், கோபுரங்கள், பிராகாரங்கள், சிறு சந்நதிகள் முதலியன புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன.
நிகழும் சோபகிருது வருடம் ஆனி மாதம் 14-ஆம் தேதி (29.06.2023) வியாழக்கிழமை ஏகாதசி, சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய நன்னாளில், காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில், ``ஸ்ரீ வேங்கடாசலபதி’’ சுவாமிக்கும், ``பூமிப்பிராட்டிக்கும்’’, இதர மூர்த்திகளுக்கும் மற்றும் திருக்கோயிலுடன் இணைந்த ஒப்பிலியப்பன் கோயில் வடக்கு வீதியில் எழுந்தருளியிருக்கும் ``ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்’’ திருக்கோயிலுக்கும் திருவிண்ணகரப்பன் திருவருளை முன்னிட்டு, ``மஹா கும்பாபிஷேகம்’’ நடைபெறுவதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி அளித்தும், ஸ்ரீ பூமிதேவி சமேத ஒப்பிலியப்பனின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டுகிறோம்.
உற்சவர் ஸ்ரீ பொன்னப்பன், ஸ்ரீ பூமிதேவி தாயார் ஒப்பிலியப்பன்கோயில் திருக்கோயில் பூஜை விபரங்கள்:
நாள்:
29.06.2203 - வியாழன் (ஆனி 14)
நேரம் பூஜா விபரம்
காலை 4.40 மணி: சுப்ரபாதம்
காலை 5.00 மணி: விஸ்வரூபம்
காலை 7.30 மணி: ததுக்த ஹோமங்கள்
காலை 8.30 மணி: மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை
காலை 9.00 மணி: யாத்ராதானம், கடம் புறப்பாடு
காலை 10.00 மணி: விமான மஹா கும்பாபிஷேகம் ராஜகோபுரம், மூலவர் கும்பாபிஷேகம்
காலை 10.30-11.30 மணி: தொடர்ந்து திருவாராதனம் சாற்றுமுறை பிரம்மகோஷம் ஆசீர்வாதம், எஜமான மரியாதை பொது ஜன சேவை
இரவு 7.00 மணி: பெருமாள் தாயார் தங்க கருட சேவை உடன் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகள் திருவீதி புறப்பாடு
மஹா கும்பாபிஷேகதிற்கு, oppiliappanperumal.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தொகை செலுத்தலாம். யாகசாலை, மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுகளை uppiluappanvision என்ற youtube Channel வழியாக காணலாம்.
25.06.2023 முதல் 29.06.2023 வரை 5 நாட்களுக்கு திருக்கோயில் சார்பாக ஸ்ரீ பூமிதேவி திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக