ராமபிரானின் கணையாழியை அனுமனிடம் ஏன் கொடுத்தார்? / அதன் ரகசியம் என்ன?

க்ஞவல்கியர் என்ற மாமுனிவர் காட்டில் வாழ்ந்து வந்தார். அக்காடு, மிதிலா நகருக்கு அருகில் இருந்தது. வேள்விகள்,  கடுமையானத் தவங்கள் செய்து பெருமை பெற்றவர். இவருக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான்.        அக்குழந்தைக்கு, யாக்ஞவல்கியர் என்ற திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். குழந்தையும் திடகாத்திரமாக வளர்ந்தது. யஜுர் வேதம் அறிந்துகொள்ள வைசாம்பிய ரிஷியிடம் கல்விக் கற்றார்.

 

யாக்ஞவல்கியர்

ரு நாள் யாக்ஞவல்கியாரை நோக்கி, வைசாம்பாயனர், யாகங்களை எல்லாம் செய்து பொருள்களைக் கொடுத்து மிதிலை மன்னரான ஜனகரியிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறினார். அவருக்கும், அவ்வாறே  பிரசாதப் பொருளை எடுத்துக் கொண்டு மிதிலை நகருக்கு சென்றார். ஜனக மகாராஜா ராஜ்ய விஷயமாக வெளியூருக்கு சென்றிருந்தார். 

ந்த நேரத்தில், அரசவையில் உள்ள அத்தாணி மண்டபத்தில், கொண்டு வந்த பிரசாத பொருளை ஒரு ஓரமாக வைத்து சென்றுவிட்டார். ஜனகர் திரும்பி வந்து, பிரசாத பொருளானது பிரம்மாண்டமாக உயர்ந்து வளர்ந்து இருப்பதைக் கண்டார்.

ஜனக மகாராஜா
டனே அவர் வைசாம்பியினாரிடம் சென்று இந்த பொருள்களை எல்லாம் யாரிடம் தந்து அனுப்பினீர்கள் என்று கேட்டார். என் சீடன்  யாக்ஞவல்கியனாரிடம் இந்த பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினேன் என்ன  பதில் தந்தார்.  ஜனகருக்கு, அக்கணமே யாக்ஞவல்கியானாரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. 

குருவே தங்களுடைய சீடரை நான் உடனடியாக பார்க்க வேண்டும் என கூறியதும், மற்ற சீடரை அனுப்பி அவரை அழைத்து வரச்  சொன்னார். அவரும் வந்து சேர்ந்தார். ஜனகர், யாக்ஞவல்கியனாரை  கூர்ந்து பார்த்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் அக்கணத்தில் ஜனகர் யாக்ஞவல்கியானரின் திருவடிகளில் பணிந்தார். 

தாங்கள் கொடுத்த பொருள்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. அவர்பகண்களில் தென்பட்ட தேஜசைக்  கண்டு வியந்தார். எந்த விதமான ஆசையோ பொறாமையோ இல்லாமல் இறை நம்பிக்கையும், வாழ்க்கை தத்துவத்தையும் அறிந்திருப்பதை உணர்ந்து கொண்டார். 

பின்பு அவரிடத்தில் பல ஐயங்களை கேட்கத் தொடங்கினார்.


மிதிலை மன்னர் நட்பு கொண்டு அவருடன் சந்தேகங்களுக்கு தீர்க்கமாக பஞ்சயக்ஞத்தில், பிரம்ம யக்ஞம் கற்பித்தார். அத்வைதம் வேதத்தின் தத்துவத்தின் தன்மையை விளக்கினர். அவ்வாறே கொஞ்ச காலத்தில் இருவரும் இணை பிரியாத நண்பர்கள் ஆயினர். நட்புறவும் கொண்டனர். இருவரும் நட்போடு பழகியவர் பிரிந்தனர் மிகவும் மனம் வரைந்து மனவருத்தம் அடைந்தார். அப்பொழுது யாக்ஞவல்யானர் ஒரு பொருளை அவருக்கு தந்தார். 

அந்த பொருளைப் பெற்றுக் கொண்ட மிதிலை மன்னர் ஜனகர், அதை மிகவும் பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வந்தார். இவ்வாறு இருக்கையில்,

ராமபிரான் தந்தையின் சொல் கேட்டு வனவாசம் மேற்கொண்டு காட்டில் வரும் பொழுது, பல எண்ணங்களையும் பல மகிழ்ச்சிகளும் தரத்தக்க காட்சிகளையும் கண்டார். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள் அத்தனை பேரையும் சந்தித்து பேசினார். அவர்கள் அருகில் அமர்ந்து பிரம்ம தத்துவத்தை யோக விஷயங்களை மானிட தத்துவத்தை பிரதிபலிக்கும் பொழுது ஏற்படும் இன்னல்கள் பற்றி எல்லாம் அவர் கலந்து உரையாடினார். 

தன் பின்பு தண்டகாரண்யத்தில் தங்கியிருக்கின்ற பொழுது சரி பஞ்சபடியில் தங்கியிருந்த போதும், பூமியில் அவதரித்த காரணம் அங்கே தொடங்கியது. இலங்கை மன்னர் ராவணன் தங்கை பஞ்சவடிக்கு வருகின்றாள்.  ராம, லக்ஷ்மணரைக் கண்டு வியப்படைகிறாள். அழகும் ஆண்மையும் கண்டு ஆச்சரியம் அடைகின்றாள்.

தலால், எப்படியாவது ராமனை மணக்க திட்டம் போடுகின்றாள். திட்டம் பலிக்கவில்லை. லக்ஷ்மணனிடத்தில் சென்று ஆசை வார்த்தைகளைப் பேசி மயக்க பார்த்தாள். லக்ஷ்மணன், சூர்ப்பணகையின்  தந்திரமான ஆசை வலையில் விழாமல், மூக்கையும் மார்பையும் அறுத்து அனுப்புகின்றான். 

ந்த செய்தியை அறிந்த ராவணன் பதறுகின்றான். ஒரு பக்கம் கோபம். ஒரு பக்கம் நர மனிதர்கள் செய்த லீலைகளை அறிந்தார். இவற்றுள் இவ்வளவு அகம்பாவம் வீரமா என்று கூறினார். சூர்ப்பணகை அண்ணனுக்கு கோபம் தோன்றும்  விதமாக சூழ்ச்சிதனைச் செய்து, அதில் ஈடுபட்ட ராவணன் தங்கையின் சூழ்ச்சி அறியாது மோக வலையில் விழுகின்றான்.


 மாரீசன் துணை கொண்டு ராமனை வரவழைக்கின்றான். திட்டம்  போட்டு சீதையை சிறைப் பிடித்தான். ராம பிரான் சீதை பிராட்டியார் இருக்கும் இடம் அறிந்து வர, இலங்கைக்கு அனுமனை அனுப்புகின்றார். அனுமன் கையில் கணையாழி கொடுத்தார். எங்கு திரியினும் கிடைக்காமல் சோர்வடைந்து அனுமான், அசோகவனம் வருகின்றார். 

ங்கே ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். ராவணனின் துன்புறுத்தல் பொறுக்க முடியாது, தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார் சீதாபிராட்டி. அச்சமயம், ராமநாமம்  கூறி மரத்திலிருந்து குதிக்கின்றார் அனுமான். ராவணனின் மாயத் தோற்றம்  என்று நினைத்த சீதை, அச்சம் அடைகின்றான். 

ப்பொழுது, ராமபிரான் பெருமைகளை எல்லாம்கூறி, தான் ராவணன் மாறுவேடம் அல்ல என்று உரைத்து ராமபிரான் கொடுத்த கணையாழியை தருகின்றார். அதை பார்த்ததும் சீதாப் பிராட்டி, மிகவும் மகிழ்ச்சி அடைகின்றாள்.

 

ந்த மோதிரத்தை யார் கொடுத்தது? சீதாப்பிராட்டி திருமண நாளில் ஜனக மகாராஜா பந்தலில் தன் மருமகன் ராமபிரானிடம் இந்த மோதிரம் கொடுக்கின்றார்.  இதன் சிறப்பு என்ன! இதன் பெருமை என்ன! நாம் அறிந்து கொள்ள வேண்டாம்?

ண்பரான யக்ஞவல்கியானர், எப்பொழுதெல்லாம் உனக்கு என்  நினைவு வருகின்றதோ அப்பொழுது இம்மோதிரத்தை பார்த்தால், அதில் என்னுடைய உருவம் தெரியும். நம் இடையே உள்ள நட்பு என்றும் அழியாதது. நாம் எந்த நேரத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் மோதிரத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம். என கூறிக் கொடுத்தார். 

ந்த விசேஷமான மோதிரத்தைதான், மருமகனுக்கு கொடுத்தார். அந்த மோதிரத்தைதான், அனுமனிடம் கொடுத்து அனுப்பினார். அதை பார்த்ததும் ராமபிரானுடைய திரு உருவம் தெரிந்தது. அதை கண்டு அவள் மகிழ்ந்தாள், மனத்தெளிவும் பெற்றாள். 

து போலவே, ராமபிரான் சீதையின் முகத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து  சீதாப்பிராட்டி உயிர் வாழ்வதற்கு இந்த கணையாழி காரணமாகின்றது.

         - பொன்முகரியன்

எழுத்தாளர் பொன்முகரியன் பற்றிய சிறு குறிப்பு:

பொன்முகரியனின் இயற்பெயர் ராதிகாதேவி. இவர் தமிழாசிரியர், மிக சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர், தினகரன், திஇந்து, கலைமகள் போன்ற நாளிதழ்களிலும், வார - மாத இதழ்களிலும் தொடர்ந்து பல ஆன்மீக கட்டுரைகளை எழுதிவருபவர். கம்பராமாயணத்தில் வருகின்ற 18 கதாபாத்திரங்களை எழுதி, அதனை புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், சமூக சிந்தனை உள்ள பல நாவல்களை ``பொன்முகரியன்'' என்ற பெயரில் எழுதிவருகின்றார். நம் ``மத்வாச்சார்யா தமிழ் மேகஸினுக்காக'' இந்த கட்டுரைகளை எழுதியதற்கும், இன்னும் எழுதபோவதற்கும் எனது நன்றிகள்..! பொன்முகரியன் அவர்களை, மத்வாச்சார்யா தமிழ் மேகஸின் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.

நன்றி... 

 - ஆசிரியர்

தேதி:17.07.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்