பக்தர்களுக்கு அக்ஷயபாத்திரமாய் இருக்கும் அக்ஷோப்ய தீர்த்தர்


ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்

நாம் இன்று காணவிருக்கும் மகான் ``அக்ஷோப்ய தீர்த்தர்''. பெரும்பாலும் மத்வ மக்களுக்கு நன்கு பரிக்ஷயமான மஹான். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், 1159 சகப்ஜ சகாப்தத்தில் அதாவது, கி.பி. 1238 பிறந்தார். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் கோவிந்த சாஸ்திரி.  வேதாந்த பீடத்தில் அமர்ந்த மத்வரின் நேரடி சீடர்களில் கடைசி சீடர் இவரே.

ஸ்ரீ மத்வாச்சார்யாவை சந்தித்து சரணடைவதற்கு முன்பு வரை, அத்வைத்த மார்கத்தை பின்பற்றி வந்திருக்கின்றார். மேலும், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரை    பேஜாவர் மடத்தின் பீடாதிபதியாக்கி, அதன்பிறகு, அஜ-விதல் தெய்வத்தை மத்வாச்சாரியார் வழங்கினார். 

``மத்வ தத்வ சாரசம் கிரஹா" என்ற புத்தகத்தை எழுதியதாக சிலர் கூறுகின்றனர். அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பது சரியாக யாருக்கும் புரியவில்லை. இருப்பிலும், ``துவைத கோட்பாட்டின் கையேடு" என்று அந்த நூலை பற்றி ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீமன் நியாய சுதாவின் நூலாசிரியர், ஸ்ரீ ஜெய தீர்த்தரின் குரு அக்ஷோப்ய தீர்த்தர் ஆவார்.   

மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால்,  அத்வைதத்தின் முக்கிய மகான் ஸ்ரீ வித்யாரண்யரின் சமகாலத்தவர் நம், அக்ஷோப்ய தீர்த்தர். அதே போல், புகழ்பெற்ற விசிஷ்டாதுவைதத்தின் முக்கியமான மகான் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சமகாலத்தவர்.

கி.பி. 1336 - ஆம் ஆண்டு, ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், அத்வைதியான ஸ்ரீ வித்யாரண்யருடன் "தத்வம் - அசி" என்னும் `ஸ்ருதி' உரையின் விளக்கம் குறித்து இருவரும் தர்க்கத்தில் (விவாதத்தில்)  ஈடுபட்டார்கள். 

ந்த வாதத்தின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்ரீ வேதாந்த தேசிகரின் முன்னிலையில், விரிவான மற்றும் சில சமயங்களில் கடுமையான வாதங்கள் பரிமாறப்பட்டன.


ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் -  ஸ்ரீ வித்யாரண்யர் ஆகிய இருவருக்கும் நடைபெறும் வாதங்களை எழுத்துப் பூர்வமாக எழுதப்பட்டு வந்ததாகவும், வாதம் முடிவில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சொன்ன தீர்ப்பு, ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தருக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வரலாற்று வெற்றிக்கான கல்வெட்டு ஆதாரம், கர்நாடக மாநிலம்  முலுபாகல் அருகே உள்ள ஒரு மலையில், இன்றும் காணக் கூடிய வெற்றியின் நினைவு தூண் ஒன்றில் உள்ளதாம்.

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், வடக்கே பீமா - ரதி நதிக்கரையில் உள்ள பண்டாரபூருக்கு சென்றார். அங்குதான் அவர் தனது வருங்கால சீடர், ஸ்ரீ ஜெய தீர்த்தரை சந்தித்தார். அதன் பின், பல ஆண்டுகள் அக்ஷோப்ய தீர்த்தர், தனது பெரும்பாலான நேரத்தை செலவு செய்து, ஸ்ரீ ஜெய தீர்த்தருக்கு 'துவைத' தத்துவத்தை  பயிற்றுவித்தார். 

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், மற்றவர்கள் தவறவிட்ட மத்வரின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் முக்கியத்துவத்தை எப்படித் தேடுவது என்றும், விரோதமான 'அத்வைத தத்துவத்தை மேலும் தகர்த்த ``டீகா" என்ற  புத்தகங்களை எழுதுவது எப்படி, என்று ஸ்ரீ ஜெய தீர்த்தருக்கு  கற்றுக் கொடுத்தார்.

க்ஷோப்ய தீர்த்தரால், நன்கு பயிற்சி பெற்று  ``வாசஸ்பதி'', ``விவரங்கரா'', ``அமலானந்தா'', ``சிட்சுகா'' மற்றும் ``விஜ்ஞானஷனா'' போன்ற வியாக்கியங்களை (நூல்கள்) எழுதி அத்வைத தத்துவத்தின் புரிதலில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டி, வைணவ உண்மைகளுக்கு மேலும் வலுவூட்டி, பரபரப்பை ஏற்படுத்தினார். 

த்துவ ரீதியாக, அக்ஷோப்ய தீர்த்தரை யாராலும், யவராலும்  தொட முடியவில்லை.  மேலும், ராமானுஜாச்சாரியாரின் படைப்புகளுக்கு வர்ணனைகள்கூட செய்திருந்தார். 

திரிவிக்ரம பண்டிதாசார்யா, பத்மநாப தீர்த்தர் மற்றும் நரஹரி தீர்த்தர் போன்ற அவரது முன்னோடிகளின் புத்தகங்களை தழுவி, சுமார் இருபது புத்தகங்களை அவர் எழுதினார். 

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் மூலபிருந்தாவனம், கர்நாடகா மாநிலம், மல்கெடா என்னும் இடத்தில் உள்ளது.

மல்கெடாவிற்கு எப்படி செல்வது?

ல்கெடா, குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வருகிறது. குல்பர்காவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. குல்பர்காவிலிருந்து மல்கேட் செல்ல போதுமான பேருந்து வசதி உள்ளது.

இத்தகைய மாபெரும் மகான்களைப் பற்றி எழுதுவதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்த தொகுப்பில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஸ்ரீ ஜெயதீர்த்தரை பற்றி காணலாம்.

                                                                                                  - தொகுப்பு. ரா.ரெங்கராஜன்

தேதி:23.08.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்