தோஷங்களை போக்கி அருளும் தோத்தாத்ரிநாதன்

உற்சவர் தோத்தாத்ரிநாதர் 

கோயிலின் சிறப்புகள்: 

பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்தும், எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பதை குறிக்கும் வகையில் மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி தருகிறார். மேலும், பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. ஆதிசேஷன் தங்கக் குடை பிடிக்க, இத்தல எம்பெருமான் பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், சந்திர சூரியர், விஷ்வக்சேனர், ரம்பை, திலோத்தமை என அனைவரும் ஒருசேர ஏக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய நிலையையும் இத்தல கருவறையில் கண்டு வியக்கலாம்.

இக்கோயிலில் மிகவும் சிறப்பம்சமாக, மூலஸ்தானத்தில் உள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும் சுயம்பு மூர்த்தியாகவே அருள்பாலிக்கின்றனர்.

மூலவர் தோத்தாத்ரிநாதர்

மேலும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரும் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாகவே காட்சி தருகின்றனர். இத்தகைய 11 சுயம்பு மூர்த்திகளை கொண்ட அமைப்பு இக்கோயிலில் மட்டுமே உள்ளது.

வேறென்ன சிறப்பு:

இத்தலத்தில், திருவிழா காலங்களில் செவ்வந்தி மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் கலைக் கூடத்திற்கு அப்பால் லட்சுமி வராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதார மூர்த்திகள் என அனைவரும் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் இது 80-வது திவ்ய தேசம் ஆகும்.

ஆண்டு முழுவதும் இத்தல பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடப்பது சிறப்பம்சமாகும். ராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது:

இக்கோயிலில், பங்குனி உத்திரத்தன்று தங்கத்தேர் இழுக்கப்படுவது மிகவும் விசேஷமாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்சவம், இத்தலத்தின் மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது:

தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது:

இக்கோயிலில், வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்த கோயில் எங்கு உள்ளது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி என்னும் ஊரில் ``அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்" அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது:

திருநெல்வேலியில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் நாங்குநேரி என்னும் ஊர் உள்ளது. நாங்குநேரியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

தேதி: 01.08.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027      

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்