திருமலையில் ஆறு கோடி தீர்த்தங்கள்! / பகுதி - 4

                                          

ஆகாச கங்கா

                                         திருப்பங்களை தந்தருளும் திருப்பதி 

யாரும் அறியப்படாத திருப்பதி தகவல்கள் - 4 

திருமலையில் ஆறு கோடி தீர்த்தங்கள்!

``திருப்பங்களை தந்தருளும் திருப்பதி'' என்ற தலைப்பிட்டு நம் மத்வாச்சார்யா தமிழ் மேகஸினில் மூன்றே மூன்று பகுதியினை மட்டுமே பதிவிட்டோம். அடே.. எப்பா.. எத்தகைய ஆதரவு!. `ஏன் அடுத்த பகுதி வரவில்லை?" என்று தொடர்ந்து வாசகர்கள் கேட்டவண்ணம் இருந்தார்கள்.  அந்த திருப்பதி திம்மப்பனின் மகிமைகளை தெரிந்துக்கொள்வதில் வாசகர்களுக்கு அதீத ஆர்வம் போலும்!... நமக்கும் அப்படியே.. வாருங்கள் அடுத்த பகுதிக்கு சென்று அவனின் நாமத்தை; மகிமைகளை; திருப்பதியின் அதிசயத்தை காண்போம்.  

திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத்தொடரில் மிகவும் புனிதமான ஆறு கோடி தீர்த்தங்கள் இருப்பதாக, சொல்லப் பட்டிருக்கிறது. இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சில, மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது.

இதில் முக்கியமானது ஆகாச கங்கா:

பாபவிநாசனம், ஜாபாலி தீர்த்தம், கோகர்ப தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம், சனகசனந்தன தீர்த்தம், சக்கர தீர்த்தம் முதலியவை. இந்த தீர்த்தங்களை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக சென்று பார்க்கலாம். ஆகாசகங்கா தீர்த்தத்திலிருந்துதான், திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தீர்த்தம் தினமும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அப்பால், பாபவிநாசன தீர்த்தம் இருக்கிறது. கோகர்ப தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் என்று கூட அழைக்கப்படுகிறது.

குமாரதார தீர்த்தம் என்ற புனித தீர்த்ததில் சுப்ரமணிய சுவாமி முருகன், நிரந்தரம் தவத்தில் இருப்பார் என்றும், தினமும் கர்ப்பாலயத்தில் வந்து சுவாமியை தரிசிப்பார் என்றும், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

தே போல் தும்புரு தீர்த்தத்தில், நாரதர், தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும், இந்த தீரத்தங்களில் ஒரு  பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி, சுவாமியை தரிசித்து செல்வார்கள் என்றும், அவர்களுடைய பாத சுவடுகள்கூட சிலர் பார்த்திருப்பதாக பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட புனிதமான தீர்த்தங்கள் திருமலையில் எத்தனையோ இருக்கின்றன. 

சாமானிய ஜனங்களுக்கு, அதிருஷ்யமாக, கண்ணில் படாத வகையில் எத்தனையோ இருக்கின்றன. இவை சித்தர்களுக்கும், தேவதைகளுக்கும் மட்டும் காணப்படுகிறது. அவர்கள் அதில் நீராடி , சுவாமியை தரிசித்து, புண்ணியத்தை பெறுவார் என்றும், புராணங்களில் சொல்லப்பட்ட மிகவும் அதிசயமான உண்மைகளில் ஒன்று.

சுவாமியை தரிசித்தபிறகு, இந்த தீர்த்தங்களை தரிசிக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

சில தீர்த்தங்கள்; ஆகாசகங்கா,  பாபவிநாசனம், கோகர்ப தீர்த்தம் இவையெல்லாம் சாலையின் வழியாக வாகனங்களில் சென்று தரிசிக்கலாம். மீதி தீர்த்தங்கள்; தும்புரு தீர்த்தம், குமாரதாரா, ராமகிருஷ்ண தீர்த்தம் இவைகளை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக செல்லவேண்டும். ஆனால், மிகவும் அழகான, இயற்கையின் சூழ்நிலையில் அமைந்திருக்கும்  இந்த தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை.

மிகவும் பவித்ரமானவை. நம்முடைய பாவங்களை தீர்த்து புண்ணியங்களை அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த நீர்நிலைகள். இவைகளை பக்தர்கள் அவசியம் தரிசித்து, சுவாமியின் அருளை பெற வேண்டுகிறோம்.

                                                                                    அறியப்படாத தகவல்கள் தொடரும்...

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்