கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் தத்துவார்த்தம் / கிருஷ்ண ஜெயந்தி - 06.09.2023


ர்மத்திற்கு சோதனை ஏற்படும் போதெல்லாம்தான் அவதரிப்பதாக கூறியவர், அந்த பரந்தாமன்.  மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” ஆவார். அவர் பிறந்த “ஆவணி” மாதம் “ரோகிணி” நட்சத்திர தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

யர்பாடிக்கு அழைத்து செல்வீராக? என்ற அசரிரீ ஒலி கேட்க, வாசுதேவரும்  குழந்தையை ஒரு கூடையில் வைத்து தலையிலே சுமந்து கொண்டு சிறைச்சாலைகள் இருந்து வெளியே செல்கிறார். சிறையில் கதவுகள் அனைத்தும் தானே திறந்து வழி விடுகிறது.

சிறிது தூரம் செல்லும் பொழுது அடைமழை பெய்கிறது. அப்போது பகவான் நனைந்து விடக்கூடாது என ஐந்து தலைகளைக் கொண்ட நாகம் ஒன்று குடைப்பிடித்து வசுதேவரின் பின்பே செல்கின்றது. அசரிரீ கேட்டது போல, வசுதேவர் குழந்தையை ஆயர்பாடிக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார். அங்கு அவர் யசோதையின் வளர்ப்பு மகனாக வளர்கிறார். துவாரகையை தலைநகராகக் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி செய்தார்.

ஞ்ச பாண்டவர்களுக்கு, குருஷேத்திரப் போரில் உதவியதுடன், அர்ஜுனனுக்கு தேர் சாரதியாகவும் இருந்து, மனிதர்களுக்கு சிறந்தவற்றை போதிக்கும் “பகவத் கீதையை” உலகிற்கு அளித்தார்.


கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், தயிர் , அவல், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி  ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.

ம் பக்தர்களை, தன் கண்களை போல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம். அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தேதி: 06.09.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027        

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்