குருவருள் அருளும் குரு நரசிம்மர் / உடுப்பி, கர்நாடகா.

சாலிகிராமத்தில் உள்ள குரு நரசிம்மர் கோவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள முக்கியமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். சாலிகிராமம் தேசிய நெடுஞ்சாலை 17-ல் உடுப்பியிலிருந்து வடக்கு நோக்கி 23 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். சாலிகிராமத்தின் முக்கிய கோயில்களில் குரு நரசிம்ம கோவில் மிக முக்கியதாகும். இந்த தெய்வத்தின் சிலை மிகவும் பழமையானது என்றும், இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது சாலிகிராம ரூபி என்றும் கூறப்படுகிறது. நரசிம்மர் மேற்கு நோக்கி வலது கையில் சக்கரம் மற்றும் இடது கையில் சங்கு  மற்றும் பின்புறத்தில் பிரபாவலி ஆகியவற்றுடன் காட்சித் தருகிறார். ஸ்கந்த புராணத்தின் "சஹ்யாத்ரி காண்டா" படி, சாலிகிராமத்தில் உள்ள குரு நரசிம்மர் நாரத மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.


 ந்த கோயிலில் உள்ள சக்ர தீர்த்தத்தில் புனித நீராடினால், அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம். மேலும், எதிரி பயம் நீங்கும். நீராடி, குரு நரசிம்மரை வழிபடுபவர் செழிப்பை அடைவார்.

இந்த கோயிலின் பற்றிய மேலும் சில தகவல்களை அடுத்தடுத்த தொகுப்பில் காணலாம்!

தேதி: 29.09.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்