வாழ்வில் உச்சத்தை அடைய உச்சிப்பிள்ளையார் / விநாயகசதுர்த்தி ஸ்பெஷல்

மலைக்கோட்டை
உச்சிப்பிள்ளையார் கோயில்
திருச்சி என்று சொன்னாலே  நினைவில் வருவது ரெங்கநாதர் கோயிலும்,        உச்சிப்பிள்ளையாரும்தான். திருச்சிக்கு வருபவர்கள், கண்டிப்பாக இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லாமல் ஊர்களுக்கு திரும்பமாட்டார்கள். அதுவும், உச்சிப்பிள்ளையாரை பார்ப்பது என்றால், மனதிற்குள் ஆசை ததும்பும்.

காரணம், மெயின் காட் கேட்டில் இறங்கி மலைக்கோட்டை வாயிலில் நுழைந்து, ரோட்டோரமாக விற்கும் கடலை, சுண்டல் மசாலாக்களை வாங்கி, மகிழ்ச்சியாக, ஒட்டுமொத்த குடும்பத்தோடு, சிரித்து மகிழ்ந்து உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க செல்லும் அழகு இருக்கே...! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படியாக, ஓர் அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கும்.


மலைக்கோட்டையின் முகப்பு
ரி.. உச்சிப் பிள்ளையார் எப்படி தோன்றினார்? அவரின் வரலாறுகள் என்ன? போன்ற தகவல்களை நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். 

ச்சிப் பிள்ளையார் கோயில், சுமார் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாகும். புராணத்தின் படி, ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத ஸ்வாமியை ஸ்தாபித்த பிறகு, விபீஷண மன்னனிடமிருந்து விநாயகப் பெருமான் ஓடிய இடம் இதுவாகும்.

ந்த கோயில், 83 மீட்டர் (272 அடி) உயரத்தில் ஒரு பாறையின் மேல் அமைந்துள்ளது. வழுவழுப்பான பாறை. முதலில் பல்லவர்களால் கட்டப்பட்டது. ஆனால், விஜயநகரப் பேரரசின் கீழ் இரண்டு கோயில்களையும் முடித்தவர்கள், மதுரை நாயக்கர்கள். இரண்டு கோயில்களா?... ஆம்! உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க படிகளில் மேலே செல்லும் வழியில்,  தாயுமானஸ்வாமி கோயில் உள்ளது. தாயுமானவரை தரிசித்த பிறகுதான், உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வேண்டும்.

தாயுமானஸ்வாமி

 விநாயகர் கோயில் மிகவும் சிறியது, பாறையில் செதுக்கப்பட்ட படிகள் வழியாக செல்லலாம். பல்லவர்களால் உருவாக்கப்பட்ட பழமையான கட்டிடக்கலை காரணமாக, இந்திய தொல்லியல் துறையால் இக்கோயில் பராமரிக்கப்படுகிறது.

லங்கையை ஆண்ட அசுர மன்னன் ராவணனின் தம்பி, விபீஷணன். ராமாயணத்தில், ராமர், ராவணனால் கடத்தப்பட்டு, பிடித்து வைக்கப்பட்டிருந்த தன் மனைவி சீதையை, சுக்ரீவனின் உதவியுடன் மீட்டு, அனுமன் அவரை தோற்கடித்தார். இதனால் ஈர்க்கப்பட்டு, விபீஷணன் தனது சகோதரனுக்கு எதிரான போரில், ராமனுக்கு உதவுகிறான். இறுதியில் ராமர் போரில் வெற்றி பெற்று, விபீஷணனுக்கு அன்பின் அடையாளமாக விஷ்ணுவின் வடிவமான ரங்கநாதரின் விக்ரஹத்தை கொடுக்கிறார்.


விபீஷணன் ராமரை ஆதரித்தாலும், அடிப்படையில் ஒரு அசுரன். எனவே தேவர்கள் (இந்து புராணங்களின்படி அசுரர்களுக்கு பரம எதிரிகள்) அசுரன் தனது ராஜ்யத்திற்கு இறைவனின் உச்ச வடிவத்தை எடுத்துச் செல்லும் இந்த யோசனையை நிறுத்த விரும்பினர். தடைகளை நீக்குபவர் மற்றும் கல்வியின் கடவுளான விநாயகப் பெருமானின் உதவியை அவர்கள் கோருகிறார்கள்.
மேலும், இந்த திட்டத்தை இறைவன் ஏற்றுக் கொள்கிறார்.

விபீஷணன், தனது ராஜ்யத்திற்கு செல்ல, திருச்சி வழியாகச் செல்லும்போது, ​​ காவேரி நதியில் குளித்து தனது அன்றாட கர்மாக்களை செய்ய விரும்பினான். ஆனால், ரங்கநாதர் விக்ரஹத்தை கீழே வைக்கக்கூடாது. அப்படி வைத்துவிட்டால், அந்த ரங்கநாதர் அங்கேயே நிரந்தரமாக இருந்துவிடுவார், என்கின்ற ஒரு விதி இருந்தது. இதனால் செய்வதரியாது திகைத்து நின்றார்.



தூரத்தில், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை பார்க்கிறார், விபீஷணன். அந்த சிறுவன்தான் விநாயகப்பெருமான். விபீஷணனுக்கு, அந்த சிறுவன்தான் விநாயகப்பெருமான் என்று தெரியாது. அந்த சிறுவனை அழைத்து;

``தம்பி, நான் என் நித்ய கடமைகளை செய்யவேண்டும் (சந்தியாவந்தனம் போன்றவை) அதனால், இந்த ரங்கநாதர் விக்ரஹத்தை பத்திரமாக பார்த்துக்கொள். தயவு செய்து கீழே மட்டும் வைத்துவிடாதே''. என்று பல முறை அறியுரை கூறி, தான் கொண்டு வந்த ரங்கநாதரை, விநாயகரிடம் தந்து,
விபீஷணன் தண்ணீருக்குள் செல்கிறார். அவர் முழுவதுமாக மூழ்கியதும், தன் கையில் இருந்த ரங்கநாதரை காவேரி கரை ஓரமாக அங்கையே வைத்துவிடுகிறார். 
தைக் கண்டு கோபமடைந்த விபீஷணன், சிறுவனாக வேடமிட்ட விநாயகரை தண்டிக்க துரத்துகிறான். சிறுவன் ஓடிக் கொண்டே காவேரிக் கரையருகே உள்ள பாறையின் மேல் ஏறுகிறான். விபீஷணனும் துரத்திச்சென்று,  இறுதியாக சிறுவனை அடைந்து , அவனது உச்சந்தலையில் கொட்டுகிறார். இன்றும் உச்சிப்பிள்ளையாரின், உச்சந்தலையில் ஒரு குழி இருப்பதைக் காணலாம்.

உச்சிப்பிள்ளையார் 
னது சுயரூபத்தை அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்றதும் விபீஷணன், உடனடியாக மன்னிப்புக் கேட்கிறான்.
விநாயகர், அருளளித்து, இந்த ரங்கநாத பெருமாள், ஸ்ரீரங்கத்தில் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தி, விபீஷணனை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார்.
லைக்கோட்டை மலையடிவாரத்தில், மாணிக்க விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க முடியாதவர்கள், இந்த மாணிக்க விநாயகரை வேண்டிக் கொள்வார்கள். மேலும், மாணிக்க விநாயகரை வணங்கிய பின்னர்தான் மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம்.  

விநாயகசதுர்த்தி அன்று சுமார் 150 கிலோ கொழுக்கட்டை நிவேதனம் செய்வது வழக்கம். இதனை காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். நிவேதித்த கொழுக்கட்டையை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். அந்த கொழுக்கட்டை மிகுந்த ருசியாக இருக்கும்.

வாருங்கள்..! ஒரு முறையாவது விநாயகசதுர்த்தியன்று, திருச்சி மலைக்கோட்டையில் அருளும் உச்சிப்பிள்ளையாரை தரிசித்து, நிவேதிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் கொழுக்கட்டையை பெற்று ருசித்து மகிழ்ந்து வாழ்வில் உச்சத்தை அடைய வேண்டுகிறோம்!

அனைவருக்கும் இனிய விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துகள்...

தேதி: 16.09.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்