திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி / கோலாகல கொண்டாட்டம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசலை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசலை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து, 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தேதி: 30.10.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்