ராகு காலம், எமகண்டத்தில் சுபகாரியங்கள் ஏன் செய்யக் கூடாது? / கேள்வி - பதில்கள்

ராகு காலம், எமகண்டத்தில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்கிறார்கள். சிலர் செய்யவும் செய்கிறார்கள். ஒரு கெடுதலும் வருவதில்லையே?

பதில்: ழையில் நனைந்தால் சளி பிடிக்கும். மழையில் நனையும் எல்லோருக்கும் சளி பிடிக்கிறதா என்ன? நம்மைவிட பல மடங்கு ஞானம் உள்ளவர்கள் சிலவற்றை விதியாக அமைத்து நம் நல்வாழ்வுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம்முடைய விருப்பம். நம் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். 

யில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு செல்ல, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள். ஆனால், நம்முடைய மக்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் ரயில்வே டிராக்கிலேயே கடந்து போவார்கள். ஒன்றும் ஆகாது. ஆனால், ஏன் கடக்க கூடாது? எதற்கு மேம்பாலமும் சுரங்கப்பாதையும் கட்டி வைத்திருக்கிறார்கள்? அந்த விதியை எடுத்துவிடலாமே? தேவையில்லாமல் கோடியில் செலவு செய்து இவ்வளவு கட்ட வேண்டாமே. 

காரணம், ரயில்வே டிராக்கை கடப்பதில் ஆபத்து அதிகம் உண்டு என்பதால் தானே கட்டி வைத்திருக்கிறார்கள். அதேதான் ராகு காலத்திலும் எமகண்டத்திலும். 

நன்றி: K.B.ஹரிபிரசாத் சர்மா

தேதி: 11.12.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்