அதிசய மூக்குத்தி அம்மன் / மயிலாடுதுறை

காமுகாம்பாள் அம்பிகை (அதிசய மூக்குத்தி அம்மன்)

பொதுவாகவே கோயிலுக்குள் சென்ற உடனேயே முதலில் அம்பாள் சந்நதி எங்கு இருக்கிறது என்று அறிந்து, முதலில் அம்பாளை தரிசித்துவிட்டுதான் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று கூறுவார்கள். காரணாம், பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து, பெருமாளிடம் அதனை தெரிவித்து, அந்தந்த குறைகளை சீக்கிரம் நிவர்த்தி செய்ய, பெருமாளிடம் அம்பாள் பரிந்துரைப்பாளாம். 

தே போல், பெண்களை நம் இந்திய திருநாட்டில் மிக உயரிய ஸ்தானத்தில் போற்றி மதிக்கின்றோம். அதனாலதான், இந்திய நாட்டை `தாய் நாடு' என்று தாய்க்கு நிகராக போற்றுகிறோம். பகவானும் அப்படித்தான். முதலில் அம்பாளை தரிசிக்க சொல்கிறார். அவளிடம் பிரார்த்திக்க சொல்கிறார். பிறகு என்னிடம் வாருங்கள் என்கிறார். 

ஸ்ரீ துர்காபுரீஸ்வரர்
ப்படி ஒரு பிரசித்தி பெற்ற அம்மாள் திருக்கோயில், நாகை மாவட்டம், காளி வட்டம், மயிலாடுதுறை தாலுக்காவில் ஒரு சிறந்த பரிகார ஸ்தலமான கிடாத்தலைமேடு, ஸ்ரீ காமுகாம்பாள் சமேத ஸ்ரீ துர்காபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மேலும், ஸ்ரீ துர்காம்பிகை, சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆகிய மூன்று கோயில்களும் உள்ளன.

துர்காபுரீஸ்வரர்:

முன்னொரு காலத்தில், மக்களை கடும் துன்பத்திற்குள்ளாக்கி வந்தான் மகிடன் என்ற அசுரன். பொறுமைக்கே பெயர் போன அன்னை துர்கை, ஒரு கட்டத்தில் அசுரனின் அட்டூழியங்களை பொறுத்துக் கொள்ள முடியாத சூழலில், மகிடனை வதம் செய்கிறார், துர்கை. அசுரனை கொன்றதால் துர்கைக்கு பாவம் ஏற்படுகிறது. 

தனை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நினைத்து பூஜித்து, தவமிருக்கிறார், துர்கை. துர்கை அம்மன் பூஜித்ததால் இங்கு `ஸ்ரீ துர்காபுரீஸ்வரராக’ சிவன் அருள்கிறார். 

கோயிலின் முகப்பு

மேலும், தவத்தின் பலனாக, துர்கையின் பாவத்தை போக்கி, தனது தென்மேற்கில் இடமளித்து, ஆணவத்தின் வடிவமான மகிஷாசுரனுடைய தலைமேல் காலை வைத்து, ஆணவத்தை அடக்கி, துர்கையை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்திடும் சக்தியை துர்கைக்கு அளித்தார். தரிசித்த உடனேயே எல்லா விதமான பாவங்களையும் போக்கி, ஞானத்தை தந்தருள்வார் நம் துர்காபுரீஸ்வரர்.

காமமான துன்பத்தை போக்கும் ஸ்ரீ காமுகாம்பாள் அம்பிகை: 

முதலில் அம்பாளை பிரார்த்திக்க வேண்டுமென்று நாம் முன்பே சொன்னோம் அல்லாவா! அப்படி தனது சிவ அபச்சாரத்தை போக்கிக் கொள்ள காமகனாகிய மன்மதன், இத்தலத்தின் அம்பிகையிடம் பிரார்த்தித்து, தவமிருக்கிறான். மன்மதனின் தவத்தால் அம்பிகையானவள் மகிழ்ந்து, தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மன்மதனுக்கு கொடுத்து அருள்கிறாள் அம்பிகை. இதனால், எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதால் `காமுகாம்பாள்' என்ற பெயர் பெற்றார். மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீ காமுகாம்பாள் அம்பிகை.

மூக்குத்தி துர்கை:

ங்கு எழுந்தருளியுள்ள துர்கைக்கு அழகான மூக்குத்தி ஒன்று அணிவிக்கப்படுகிறது. இந்த மூக்குத்தி அணிவதற்கென்று துர்கை அம்மனின் இடது நாசியில், ஒரு சிறு துவாரம் ஒன்று காணப்படுகிறது. என்ன துவாரமா? என ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம்.. அதற்கு ஒரு சுவாரஸ்ய கதை ஒன்றும் இருக்கிறது. துர்கையம்மனை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்து, சிற்பியிடம் ஒரு துர்கை அம்மனின் திருவுருவ சிலை ஒன்றை வடிவமைக்க சொன்னார்கள். சிற்பியும் பல மாதங்களாக அரும்பாடுபட்டு அழகான துர்கை சிலையை வடிவமைத்தார். 

ரு நாள் இரவில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்கை அம்மன், `எனக்கு ஒரு அழகான மூக்குத்தியினை அணிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்' என்று அம்பாள் சொன்னதும், திடுக்கிட்ட சிற்பி, `வேலைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிவிட்டதே.. இந்த நேரத்தில் நாசியில் நான் உளியை வைத்தால் சிலை பின்னமாகிவிடாதா?' என்று நடுக்க குரலில் சிற்பி கேட்டான். 

மெல்லிய சிரிப்புடன்.. `வருந்தாதே.. என் நாசியின் மீது உன் உளியை மட்டும் வை. பிறகு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி மறைந்தாள்.


றுநாள் காலையில், அம்மன் கூறியதை போலவே, அம்மன் சிலையில் இருக்கும் நாசி பகுதியில் உளியை வைத்தான். என்ன அற்புதம்! அடுத்த கணமே தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டது. நடந்த எல்லாவற்றையும் ஊர் பெரியோர்களிடம் சிற்பி தெரிவித்தார். அன்று முதல் துர்கை அம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

கிடா ரூபத்தில் காணப்படும் மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்குத் திசை நோக்கி அருள்புரிகிறாள். சிம்ம வாகனம் மற்றும் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். இரண்டு கரங்களில் வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் தரித்தும் தரிசனம் அருள்கிறாள். அதே போல், 1996-ல் துர்கை சந்நதியில் `ஸ்ரீ சக்கரபூர்ண மகா மேரு’ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், விழா காலங்களில் துர்கை அம்மனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றது. அதே போல், துர்கைக்கு நேர் எதிரே சுமார் 20 அடி உயரத்தில் சூலம் ஒன்றும் உள்ளது. சூலத்தின் அடிபாகம் 20 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் செல்கிறது. துர்கை அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போதெல்லாம், இந்த சூலத்திற்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. 

வை தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும், ஒரு அடி நீளத்தில் மற்றுமொரு சூலமும் உள்ளன. இதனை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வடிவமாக பார்க்கப்படுகிறது.

லுமிச்சை பழத்தில் சிறிதளவு தேனை தடவி இந்த சூலத்தில் குத்தி வழிபட்டு வந்தால், ஏவல், பில்லி, சூனியம் விலகும். மேலும், சூலத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்கள் அகன்றுவிடும். 

சுமங்கலியாக அம்பிகையே வந்தாள்:

1990-ல், 300 சுமங்கலியை அழைத்து `ஸுவாசனி பூஜை' நடத்த துர்கை சந்நதியில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். மனமுருகி துர்கையிடம் வேண்டிக் கொண்டனர் விழாவின் ஏற்பாட்டாளர். சரியாக பூஜைகளை ஆரம்பிக்கும் முன்பாக, ஒரு வயதான சுமங்கலியாக வந்திருந்து பூஜைகளில் கலந்துக் கொண்டு, மங்கள பொருட்களை பெற்றுக் கொண்டு, உணவை உண்டு அதன் பின் மறைந்துவிட்டார். 

விழா ஏற்பாட்டாளர்கள் எங்கு தேடியும், அந்த வயதான சுமங்கலியை காணவில்லை. திடீர் என்று ஒரு பக்தைக்கு அருள் வரவே... `அந்த வயதான சுமங்கலி பெண்ணாக வந்தது நான்தான்' (துர்கை) என்றும், விழா திருப்தியாக இருந்ததாகவும்கூற, அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள். 

கிடாத்தலைமேடு பெயர் காரணம்:

க்களை கடும் கொடுமைகளை செய்து வந்த மகிஷாசுரனை, சம்ஹாரம் செய்தாள் துர்காதேவி. மகிஷாசுரனின் தலைகொய்த அந்த வேகத்தில் விழுந்த இடமே, கிடாத்தலைமேடு.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் துர்கை: 

கன்னி தோஷம், காள தோஷம், நாக தோஷம், திருமண ஸ்தான தோஷம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறாள், துர்கை அம்மன்.

கோயில் அமைவிடம்:

குத்தாலத்தில் இருந்து 8.கி.மீ., தூரத்திலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ., தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ., தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

✏ ரா.ரெங்கராஜன்.

தேதி: 29.02.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்