மனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் என்ன? / கேள்வி - பதில்கள்
மனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதாமே? அவை யாவை?
- தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.
கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள்,
ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ
ஸம்ஸ்தைகள், அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
``உபநிஷ்க்ரமணம்'' என்ற கர்மா சிசுவுக்கு நான்காவது மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்று ‘மனு’ என்பவரால் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்ஸ்காரம் பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஆக ‘சத்வாரிம்ஷத் ஸம்ஸ்காரா:’ அதாவது ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது.
- நன்றி திரு. ஹரிபிரசாத் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக