ரஜ்ஜூ என்றால் என்ன? அதை ஏன் பார்க்க வேண்டும்? கேள்வி - பதில்கள்
ஜென்ம நட்சத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்கின்ற முறையில் இந்த ரஜ்ஜூப் பொருத்தம் என்பது இடம்பிடிக்கிறது. இதனை மாங்கல்ய பொருத்தம் அல்லது கழுத்துப் பொருத்தம் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் மாங்கல்ய பலம் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. அதனால், இதற்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள்.
உண்மையில், பழங்காலத்திய நூல்களில் இதுபோல பத்துப் பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம் பார்க்கின்ற விதிமுறைகள் எங்கும் காணப்படவில்லை. இது கடந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு முறையாக இருக்க வேண்டும்.
ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளையும் அடியேன் நன்றாக அறிவேன்.
உண்மையில், மனப் பொருத்தம் என்பது நல்லபடியாக இருந்தாலே, திருமணத்தை நடத்தலாம். மனப் பொருத்தம் என்பதையே ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்புதான் தீர்மானிக்கும். ஆக, வெறுமனே நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்காமல், ஜாதக அமைப்பினைக் கொண்டு திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பதுதான் நல்லது.
- நன்றி திரு. ஹரிபிரசாத் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக