திருமணத்திற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆற்றழகியசிங்கர் / ஓடத்துறை - திருச்சி

ஸ்ரீரங்கத்தில் விசேஷமாக போற்றப்படக் கூடிய நரஸிம்ஹ தலங்கள்:

காட்டழகியசிங்கர்,

மேட்டழகியசிங்கர், மற்றும்

ஓடத்துறை ஸ்ரீ ஆற்றழகியசிங்கர்!

திருச்சி, திருவெரும்பூருக்கு அருகிலுள்ள கிராமத்தில், ராஜ ராஜ சோழ மன்னனின் மனைவி, சோழமாதேவி அவ்வூர் மக்களுக்கு ராஜ விண்ணகர் என்ற திருமால் கோயிலையும், அதற்கு பலவகை தானங்களையும் அளித்திருந்தாள். நாளடைவில் இக்கோவில் சிதிலமடைந்து மண்மூடிப்போய் விளை நிலமானது.

 ருநாள் இந்த கோவில் இருந்த நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது, ஏர்முனைப் பட்டு பூமிக்குள் லக்ஷ்மி நரஸிம்ஹர் விக்ரஹம் ஒன்று இருந்ததைக் கண்டு, அங்கே கோயில் எழுப்பி அவரை பிரதிஷ்டை செய்யலாம் என ஊரார் முடிவெடுக்கும் சமயம்,  சிங்கம் ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டது!

 ங்கே ஒருவர் மீது அருள் இறங்கி, "காவிரியின் வடகரையில் காட்டழகியசிங்கராக இருந்து விலங்குகளிடம் இருந்து மக்களை காப்பது போல், துஷ்டர்களிடம் இருந்து தென்கரையில் அமர்ந்து மக்களை காக்கப் போகிறோம், அங்கே  அனுமன் தமக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும், எம்மை அங்கே கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யவும்" என அசரீரியாய் ஒலித்தது!

தன்படி, அங்கே பிரதிஷ்டை செய்து தினமும் வழிபாடுகள் தொய்வின்றி நடந்து வந்தன.

"ஆற்றங்கரையில், வாராது வந்து அமர்ந்த மாமணி, அந்த பகுதி சிந்தாமணி என்ற பெயர் பெற்றது! அழகியசிங்கர் அந்த ஆற்றங்கரையில் வந்து அமர்ந்ததால் ஆற்றழகியசிங்கர் என்ற திருநாமம்!

 மூலஸ்தானத்தில் மூலவர் ஸ்ரீ ஆற்றழகியசிங்கர் லக்ஷ்மி தேவியை தம் மடியில் அமர்த்திக் கொண்டு லக்ஷ்மி நரஸிம்ஹராக, ஆற்றழகியசிங்கர் என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்! ஆஞ்சநேயரும் மூன்று திருக்கண்களுடன் திவ்ய ஸ்வரூபத்தில் நம்மை ஆஸ்ரியிக்கிறார்"!

தியில், திருவரங்கத்திற்கு செல்ல பாலம் இல்லாத காலத்தில் காவிரியில், இங்கிருந்தே ஓடம் மூலமாக சென்று வந்தனர். காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் பிரார்த்ததின் பலனாக, பெருமாள் இங்கு "அழகிய மணவாளனாக உபயநாச்சிமார்களுடன்" எழுந்தருளி சேவை சாதிக்கிறார்! அதனால் இவ்விடம் ஓடத்துறை எனப்பெயர் பெற்றது!

 ங்கிலேயர் காலத்தில் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்தபோது மூன்று முறையும் இடிந்து விழுந்ததுஅச்சமயம் இத்தல ஆஞ்சநேயர் பொறியாளரின் கனவில் தோன்றி, "இத்தல லக்ஷ்மி ந்ருஸிம்ஹருக்கு கருவறை நிர்மாணம் செய்தால் பாலம் கட்டும் பணி எளிதில் முடிவடையும்" என்றருளினார்! அதன்படி கருவறை அங்கு அமைக்க, பாலம் கட்டும் பணியும் இனிதே நிறைவுற்றது!

அதே போல், திருமணம் ஆகாத ஆண் - பெண், தொடர்ந்து நான்கு சனிக்கிழமைகள் இந்த கோயிலுக்கு வந்து, தங்களின் ஜாதகத்தை நரசிம்மரின் முன் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் தங்களால் முடிந்த பிரதக்ஷணம் செய்து (குறைந்தது 12 பிரதக்ஷணம் சிறந்தது) வலம் வந்து நமஸ்கரித்து, ஜாதகத்தை பெற்றுக் கொண்டு செல்லவேண்டும்.

நான்கு வாரம் முடிந்து ஐந்தாவது வாரத்தில், கோயிலுக்கு வந்து சக்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து, அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும். 

இதனை செய்வதினால், மிக விரைவாகவே திருமணம் நடைபெறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.  

 "ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலாநாதீந் யநுக்ரமாத்

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்:"

சூரியன் சந்திரன் நக்ஷத்ரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றனஇப்படிப்பட்ட தேஜஸ் பொருந்திய விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்ஹரே!உம்மை நமஸ்கரிக்கிறேன்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 09.00 முதல் 11.00 வரை மாலை 5.00 முதல் 7.00 வரை. 

வழி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணித்து, அண்ணா சிலை என்னும் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோவில் அமைத்துள்ளது. வயதானவர்கள், ஆட்டோவில் பயணிக்கலாம். 

ரயில் மூலமாக வருவோரும், ரயில் நிலையத்துக்கு வெளியே ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் வரும். அதில் ஏறி, மேலே கூறியதை போல், பயணம் செய்யலாம்.

தேதி: 27.02.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்