வெற்றி நிச்சயம் ! இது வேதசத்தியம்!! / மாணவர்களின் தேர்வு கால சீசன் - சிறப்பு வெளியீடு

தேர்வு கால சீசன் ஆரம்பித்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் பரபரப்பாகவும், நேரத்தை வீணாக்காமலும் செலவிடும் காலம். இந்த நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு பயத்தினாலும், படபடப்பினாலும் திட்டமின்மையாலும் தாங்கள் ஒரு வருட காலமாக உழைத்த உழைப்பிற்கு பயனைப் பெறாமல் நழுவவிடுகிறார்கள். 

முயற்சிக்கேற்றப் பயனைப் பெற திட்டமிடப்பட்ட பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம் மற்றும் உடல்நலம் பேணுதல் ஆகியவை அவசியம்.

திட்டமிட்ட பயிற்சி

மாணவர்கள் தேர்வு காலம் நெருக்கும் சமயத்தில், தேர்வுக்கான நாள் வரையிலான பயிற்சித் திட்டத்தை தங்களுக்குள்ளே வகுத்துக் கொள்ள வேண்டும் (Planning)‌. முதலில் கடினமான பாடங்களையும், படிக்காமல் விடுபட்ட பகுதிகளையும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மறந்து விடுவதாகக் கருதும் பாடப் பகுதிகளையும், வரைபடங்களையும் (diagram, graph, map etc.) கணக்குப் பாடத்தையும் எழுதிப்  பார்த்தல் சிறந்தது. 

வ்வாறு எழுதிப் பார்த்தால், நமக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை வளர்வதுடன், தவறுகளை உடனே திருத்திக் கொள்ள முடிகிறது. கடினமான பகுதிகளை பயந்துவிட்டுவிடாமல் நண்பர்களிடமோ ஆசிரியரிடமோ கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டு பயில்வது சிறந்தது. ஏனெனில் படிக்காமல் விட்டுப்போன பகுதிகள் தேர்வில் மதிப் பெண்களை குறைக்க வாய்ப்பாக அமைகிறது. முக்கியமான முதல் மதிப்பெண் எதிர்பார்க்கும் மாணவர்களுக்கும், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக இன்றியமையாதது.

பாடங்களைப் படிக்கத் திட்டமிடும்போது அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது. இரவில் அதிக நேரம் படிப்பதால் (Night study) ஒரு பாடத்தைப் படிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதோடு, அடுத்த நாள் பகல் வேளையிலும் உற்சாகம் குறைகிறது. அதே பாடத்தை அதிகாலையில் எழுந்து படிக்கும் போது, அதிக உற்சாகத்துடனும், எளிதாகவும் படிக்க இயலும். இரவில் அதிகநேரம் படிப்பதால் மூளையின் செயல்திறன் குறைந்து, கிரஹிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் (understanding and obsorbing capacity) தன்மை குறைகிறது. 

ல்லா பாடங்களையும் படித்து முடித்த பிறகு திருப்புதல் (revision) மிகவும் அவசியம். பழைய மாதிரி வினாத்தாள்களை படிப்பதன் மூலம், தேர்வில் கேள்வி மாதிரி (sample questions and question pattern) தெரிந்து கொள்ளலாம்.

உணவுப் பழக்கம் & உடல்நலம்

தேர்வுநாட்களும் தேர்வுக்கால பயிற்சி நாட்களிலும் (Exam day and study holidays) உணவுக்கட்டுப்பாடு அவசியம். இந்நாட்களில் இரவில் மிதமான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை உட்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பதார்த்தங்களையும், அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவைகள் மூளையின் செயல்திறனை மந்தமாக்கி, சிந்திக்கவும் ஞாபக சக்திக்கும் இடையூறாக உள்ளன. 

தேர்வு நாட்களில் வெளிஉணவை ( Hotel Food) தவிர்ப்பதுடன், காய்ச்சிய நீரையே குடிக்கும் பழக்கத்தையும் கைக்கொள்ள வேண்டும். முக்கியமாக இரவில் நல்ல தூக்கம் (குறைந்தது 6 மணிமுதல் 8 மணிநேரம் வரை) அவசியம்.

தேர்வு நாளிலும், தேர்விலும் கவனிக்க வேண்டியவை:

தேர்வுக்கு முதல் நாளில் பாடங்களை பதட்டமின்றி திருப்புதல் மிகவும் அவசியம். தேர்வுக்கு முதல் நாளே நுழைவுச் சீட்டு( Hall Ticket), பேனா, பென்சில் மற்றும் தேவையான உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

தேர்வுக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரை படித்துக் கொண்டு, தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளாவிட்டால் பதட்டம் அதிகரிப்பதுடன், சிலவற்றை மறந்து விடுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். தேர்வு அறைக்கு தேர்வுக்கு 1 மணிநேரம் முன்னதாகவே செல்வது நலம். மேலும், தேர்வு ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே தேர்வு அறைக்குச் சென்று, இருக்கையில் அமர்ந்து பதட்டப்படாமல், சிந்தனை ஏதும் செய்து, குழப்பிக் கொள்ளாமல் ஓய்வு எடுக்க வேண்டும் (Relaxation). 

பிரார்த்தனை செய்யலாம் (prayer or meditation). தேர்வுக்கான வினாத்தாளைக் கொடுத்தவுடன், பொறுமையாக ஐந்து நிமிடம் படிக்க வேண்டும். எந்த ஒரு கேள்வியையும் தேர்ந்தெடுக்கும் முன் 2 நிமிடங்கள் சிந்தித்து பிறகு எழுத ஆரம்பிக்க வேண்டும். முழு விடையையும் 15-30 நிமிடங்கள் எழுதி, தவறு ஏற்பட்டால் நேரம் வீணாவதுடன் பதட்டமும்  அதிகரிக்கிறது. தேர்வுத்தாளில் தேர்வு எண்ணையும், துணைத்தாளில் பக்க எண்/ துணைத்தாள் எண்ணையும், துணைத்தாளில் பக்க எண்/துணைத்தாள் எண்ணையும் (Exam number and page number in main and additional sheets) தவறாமல் எழுத வேண்டும். 

தேபோல், வினா எண்ணை (Question number) தவறாமல் குறிப்பிட வேண்டும். விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு வினா எண் குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே திருத்த எளிதாக இருக்கும். இறுதியில் தேர்வு முடியும் 20 நிமிடங்களுக்கு முன்பே எல்லாவற்றையும் முடிக்கும் வண்ணம் திட்டமிட்டு எழுத வேண்டும். 

ந்த நேரத்தில், விடைத்தாளை சரிபார்க்க செலவிட வேண்டும். இறுதியில் விடைத்தாளை கவனமாக கட்டியிருக்கிறோமா என சரிபார்த்து, அனைத்து திருப்தியாக முடிந்த நிலையில் விடைத்தாளைக் கொடுக்கலாம்.

னவே, மாணவர்களே! தேர்வு நாட்களில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.!

✏ திரு.எஸ்.லக்ஷ்மிபதிராஜா

தேதி: 28.02.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்