நல்ல சிந்தனைகளை அருளும் சிந்தலவாடி யோக நரசிம்மர் / ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி - 21.05.2024
![]() |
மூலவர், ஸ்ரீ யோக நரசிம்மர், அருகில் நர்த்தனமாடும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்,கீழே, உற்சவ மூர்த்தி நரசிம்மர் |
![]() |
அமைதியான சூழலில் கோயிலின் முகப்பு தோற்றம் |
வண்ணான் காரரும், ஹரியாச்சாரும் கனவில் நரசிம்மப் பெருமான் கூறிய இடத்திற்கு செல்கிறார்கள். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். நடந்தவற்றை இருவரும் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதன் பின்னர், அந்த குறிப்பிட்ட கற்களை குப்புறப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த கற்களில் யோக நிலையில் நரசிம்மர் இருந்திருக்கிறாா். பாா்த்த அடுத்த நொடி இருவரும் கைகளை தலைக்குமேல் உயர்த்தி `யோக நரசிம்மாய நமஹ... யோக நரசிம்மாய நமஹ... என வேண்டுகிறார்கள்.
அதன் பின், இருவரும் 'யோக நரசிம்மரை' தலையில் வைத்தவாறு, திருக்காம்புலியூரை நோக்கி பயணித்தனா். 'சிந்தலவாடி' என்னும் ஊர் வந்தவுடன் தலையில் வைத்துள்ள யோக நரசிம்மரின் பாரம் அதிகமாகிவிட்டது. இதனால், வலிதாங்காது யோக நரசிம்மரை சிந்தலவாடியிலேயே வைத்துவிட்டாா் ஹரியாச்சாா். சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் நரசிம்மரை தூக்கியுள்ளனா். அவர்களால், முடியவில்லை அளவிற்கு மீறிய பாரம். செய்வதறியாது இருவரும் திகைத்தனா். மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தரிடம் சென்று இதன் விவரங்களை கூறி தெளிவுபெறலாம் என திடீரென்று ஹரியாச்சாருக்கு யோசனை பிறந்தது.![]() |
கோவில் அருகிலேயே காவேரிக் கறை |
மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தரால் சுமார் 500 வருடங்களும் மேலான மிக பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். இந்த கோயிலில் நரசிம்ம ஜெயந்தி அன்று மூன்று நாட்கள் மிக விஷேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில், ஹரிவாயுஸ்துதி, விஷ்னுசகஸ்ரநாமம், புருஷஸூக்தம், நரசிம்மருக்கு ப்ரீதியான மன்யுஸூக்தம் போன்ற வேத மந்திரங்களோடு பால், தேன், நெய், தயிர், இளநீர், வெள்ளம், மற்றும் பல வகை பழங்களைக் கொண்டு பஞ்சாமிா்த அபிஷேகங்கள் நடைபெரும்.
அபிஷேகங்கள் முடிந்த பின்னா், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிக அழகாக, யோக நரசிம்மருக்கு அலங்காரங்களை செய்வாா் அங்கு பூஜை செய்யும் ஆச்சாா். நைவேதியம் ஆன பிறகு, மஹாமங்களாரத்தி காட்டப்படும். அதை காண்பதற்கு இருகண்கள் போதாது. பல குடும்பங்களுக்கு சிந்தலவாடி யோக நரசிம்மர் குல தெய்வமாக இருந்து அருளாசி வழங்குகின்றாா்.
யோக நரசிம்மரின் அருகிலேயே கோபாலாசுவாமியும் உள்ளாா். இவர்களின் அருகில் தனி சந்நதியில் முக்யபிரானா் (அனுமாா்) இருக்கிறாா். இது தவிர விநாயகா், நாகா்கள் இருக்கிறாா்கள்.
மேலும், யோக நரசிம்மா் கோயில் அருகில் நடக்கும் தூரத்தில் " வெங்கடாஜலபதி கோயில்’’ ஒன்றும் உள்ளது. இந்த கோயிலும் பழமையானதாகும். இங்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இக்கோயில் அருகில், கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மரை தரிசிக்க வருபவா்கள், வெங்கடாஜலபதியையும் தரிசித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
![]() |
ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக, ஸ்ரீ வெங்கடாஜலபதியும், கீழே அனுமார் மற்றும் லக்ஷ்மி நாராயண பெருமாளும், அதன் கீழே ஸ்ரீ ராகவேந்திர ஸ்மாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம். |
![]() |
சிம்மபுரீஸ்வரர் கோயில் |
கருத்துகள்
கருத்துரையிடுக