இலை அங்கப்பிரதக்ஷணத்திற்கு தடையா? / நம் பத்திரிக்கை கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது.

ஆசிரியர் பகுதி

அன்பார்ந்த வாசகர்களுக்கு எனது வணக்கங்கள்,

மிக நீண்ட பதிவு, பொறுமையாக படிக்க வேண்டுகிறேன்.

சென்ற ஆசிரியர் பகுதியில், பிராமணர்களுக்கு ஏற்படக் கூடிய சமூக பிரச்சனையை பற்றி எழுதியிருந்தோம். பல வாசகர்கள், தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்கள், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டுமல்லாது... மிக பெரிய ஊக்கமாகவும் இருந்தது. இப்போதும், பிராமணர்களுக்கு ஏற்படும் ஓர் சமூக பிரச்சனையை மையப்படுத்தியே பேசவிருக்கிறோம்.

மிக உயர்ந்த பண்டிதர்கள் உண்ட இலையின் மீது அங்கபிரதக்ஷணம் செய்வது, சில மத்வ மடங்களில், ஆராதனை போன்ற விசேஷ நாட்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சிதம்பரம் அருகில் இருக்கும் குஞ்சமேடு, ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் இந்த அங்கபிரதக்ஷணம் சிறப்பாக நடைபெறுகிறது. அதே போல், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை சமயத்திலும் இலை அங்கப்பிரதக்ஷணம் நடைபெறுவது வழக்கம்.

சில ஆண்டுகளாகவே இந்த அங்கபிரதக்ஷணத்தை எதிர்த்து சிலர் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தும், நீதிமன்றத்தில் சூட் செய்தும், நம் பாரம்பரியமான சப்ரதாயத்தை முடக்குவதன் நோக்கமாக செய்துவருகின்றன. யார் நம்மை எதிர்க்கிறார்கள், அவர்களின் கட்சியின் பின்புலம் என்னென்ன என்பதனை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

னால், நம்மை எதிர்ப்பவர்களுக்கு சில கேள்விகளை ``மத்வாச்சாரியா தமிழ் மேகஸின்'' முன்வைத்து அவர்களை கண்டிக்கிறது. சாப்பிட்ட இலையின் மீது ஏன் அங்கபிரதக்ஷணம் செய்யக் கூடாது? ஏன் இதனை எதிர்க்கிறார்கள்? அவர்களின் ஒரே வாதம், இப்படி அங்கபிரதக்ஷணம் செய்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்றும், மூடநம்பிக்கை என்றும், ஒரு மனிதன் சாப்பிட்ட இலையில், இன்னொருவர் அங்கபிரதக்ஷணம் செய்வது தீண்டாமை என்பது போன்ற வாதத்தை முன் வைத்தே நம்மை எதிர்க்கிறார்கள்.

இன்னும் இந்த நாட்டில் தீண்டாமை... தீண்டாமை... என்று சொல்லியே வாக்கு பிச்சை கேட்டு வெற்றி பெறுகிறார்கள். இலை அங்கப்பிரதக்ஷணத்தில் எங்கே தீண்டாமை வந்தது? பண்டிதர்கள் உணவை உண்ணுகிறார்கள். பின்னர் விருப்பமுள்ள பிராமணர்கள் இலையின் மீது படுத்து அங்கப்பிரதக்ஷணம் செய்கிறார்கள். இதில், எங்கே தீண்டாமை வந்தது? தீண்டாமை என்பது, பண்டிதர்கள் உண்ட உணவின் இலையின் மீது வேறொரு சமூகத்தை சார்ந்தவர் அங்கப்பிரதக்ஷணம் செய்தால் தானே தீண்டாமை. அதுவும் அவர் விருப்பப்பட்டு செய்யும் போது தீண்டாமை ஆகாது. அவரை கட்டாயபடுத்தினால் மட்டுமே அது தீண்டாமை.


ந்திய நாடு ஒரு சுதந்திர நாடு... That Means, ``India is a Democratic Country" இங்கு ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க பிறருக்கு தீங்குகளை விளைவிக்காதவாறு எது வேண்டுமானாலும் செய்ய உரிமை உள்ளது. இதனை நம்மை எதிர்ப்பவர்களுக்கு, மத்வாச்சாரியா தமிழ் மேகஸின் முதலில் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறது. 

மேலும், கட்டாயமாக இலையில் அங்கப்பிரதக்ஷ்ணம் செய்யவேண்டும் என்று கிறித்துவர்கள் மத மாற்றம் செய்கின்றார்களே... அதுபோல் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பப்பட்டு தன்னிச் சையாக இதனை செய்கிறார்கள். அதனையும் நாம் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

இது ஒரு மூடநம்பிக்கை. அதனால் நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார்கள். ஒரு முறை நான் இஸ்லாமிய சகோதரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வீட்டு சுவற்றில் 786 என்று எழுதியிருந்தது. அதற்கு சில அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. நான் என் நண்பனிடம், `டேய்.. இது என்னடா?'' என்று கேட்டேன். ``இது எங்களுக்கு கடவுள் மாதிரி" என்று சொல்லி முடித்துக் கொண்டான். ஒரு எண்கள் எப்படி கடவுளாகும் என்று உடனே நான் அதை எதிர்க்கவில்லை.

அது அவனின் உரிமை. அவன் அதனை கடவுளாக எண்ணுகிறான். அவனின் முழு நம்பிக்கையால்  நிச்சயம் அவன் வணங்கும் கடவுள், அந்த எண்களில் இருப்பார். இது அவரவர் நம்பிக்கை.

ரி... சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினர்களுக்கும், அவரவர் விருப்பப்படி இறைவனை வணங்க, கொண்டாட முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை யாரேனும் தடுத்தால், பிரிவு 295, 295அ, மதக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தல் பிரிவு 296, மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல் பிரிவு 298 ஆகியவை பிரிவுகளின் கீழ் எதிர்க்கும் நபர்கள் மீது குற்றம் சாற்றப்படலாம்.

ஒன்றை நன்றாக கவனியுங்கள்... உலகத்தில், இந்திய நாட்டைத்தவிர வேறு எங்கும் பிற மத வழிபாடுகள் செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு இந்துக்கள் பெருமான்மையாக இருந்தாலும், பிற மத வழிபாட்டிற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. பாகிஸ்தானில்கூட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை வைத்து வழிபடுவார்களா என்பது சந்தேகம். 

ஆனால், இங்கு அவர்களுக்கு பெரும் சுதந்திரம் உள்ளது. கிறித்தவர்களுக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்? மத மாற்றம் செய்யும் அளவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளன.

னால், இந்துக்களுக்கு மட்டும் எத்தனையெத்தனை வஞ்சனைகள்! சொல்லிமாளாது. பெருமான்மையான இந்துக்கள் வசிக்கும் இந்தியாவில், இலையில் அங்கப்பிரதக்ஷணம் செய்ய அனுமதி இல்லையா? சட்டம் அனுமதி வழங்கியும் தடை செய்யலாமா? நம்மவர்கள் பயந்து பயந்து இலை அங்கப்பிரதக்ஷணம் செய்துவருகிறார்கள். நம் பத்திரிகை இந்த நேரத்தில் அவர்களுக்கு துணை நிற்கும். வேண்டிய சட்ட ஆலோசனைகளை செய்யும். 

இனி பயப்பட வேண்டும். மடம் கதவுகளை மூடிக் கொண்டு இலை அங்கப்பிரதக்ஷணம் செய்யவேண்டாம். திறந்து வைத்தே செய்யுங்கள். 

நம்மை எதிர்ப்பவர்களுக்கு, எச்சரிக்கை!!! இலை அங்கபிரதக்ஷணம் பற்றி நீங்கள் எதிர்த்தாலோ, பேசினாலோ, உங்கள் மீது மேலே சொன்ன பிரிவுகள் பாயும்... நம்மவர்கள் தைரியமாக இலை அங்கப்பிரதக்ஷணம் செய்யுங்கள்...!

நன்றி...

தேதி: 18.06.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்