மரணம் ஏன் வருகிறது? / வாழ்வியல் பற்றிய குட்டிக் கதை!

ஒரு குடும்ப தலைவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 40கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தனர். இந்தக் குடும்பத்துக்கு குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!

றந்தவரின் மனைவி சொன்னாள்..

``குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே?  நான் என்ன செய்வேன்? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்!” என்றார்..!

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார், ஆனால், அவர்கள் சோகம் குறையவில்லை. கடைசியில் அவர் கேட்டார்;

``ரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று.. தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்; ``இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால், அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!

வர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால், யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்

`` யா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” தந்தை சொன்னார்;

``நான் இறந்துவிட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும்” தாயைக் கேட்க அவள் சொன்னாள்;

``டுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” மனைவி சொன்னாள்;

``நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”

குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்;

``குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?” அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்; 

``குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?” குருஜி சொன்னார்;

``ங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவேதான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார். இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்!

``யிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம் பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

தேதி: 01.07.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்