கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தரின் ஊர்வலம் / Exclusive Photos

 ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் ஸ்வாமிகள்
நேற்றைய முன்தினம் சாதுர் மாத விரதம் ஆரம்பமாகியுள்ளது. இந்த விரதமானது, சந்நியாசிகளுக்கு மிக முக்கியமானதாகும். இந்த விரதத்தை ஒட்டி உடுப்பி பெஜவார் மடாதிபதி ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் ஸ்வாமிகள், 21.07.2024 முதல் 18.09.2024 வரை சென்னையில் இருந்து சாதுர் மாத விரதத்தை கடைப்பிடித்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

முதல் நிகழ்ச்சியாக, நேற்றைய முன்தினம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சுற்றியுள்ள மாடவீதிகளில், மிக பிரம்மாண்டமான  ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். 500 - ருக்கும் அதிகமான குழந்தைகள், மாணவிகள் பக்தி பாடலுக்கு நடனமாடினார்கள். இதில் ஸ்வாமிஜி, குதிரை வண்டிகளின் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ண மந்திர் - திருவல்லிக்கேணி 
மிக சரியாக சொன்ன நேரத்தில் விழாவானது தொடங்கியது. அதனை, அங்கு கூடியிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இத்தனை நபர்களையும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? ஊர்வலத்தில், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பங்கேற்கிறார்களே... போலீஸ் பாதுகாப்பும் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறதே? என்கிற எண்ணவோட்டங்கள் மனதுக் குள்ளே தோன்றியது.

நெடுநீண்ட வரிசையில் ஊர்வலம் 
னால், அவைகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டனர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள். முதலில், அவர்களுக்கு நன்றிகளை சொல்லியாக வேண்டும். திரு.ஆனந்த், திரு. சத்யபிரமோத் & குழுவினர் மிக சிறப்பான முறையில் விழாவினை வழிநடத்தி சென்றார்கள்.

ஊர்வலத்தில், கூட்டத்தின் ஒரு பகுதி 
பொதுவாகவே ஒரு கூற்று ஒன்று உள்ளது. மத்வ மதத்தில் யாரும் ஒன்று சேரமாட்டார்கள், அவர்கள் இடத்தில் ஒற்றுமை குறைவு போன்ற பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால், ஆனந்த் போன்றவர்கள் சரியாக ஒருங்கிணைத்தல், ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் போன்ற மகான்களின் செயல்பாடுகள் இருந்தால், நிச்சயம் ஒன்றுபடுவோம் என்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஊர்வலம் சாட்சி.

ர்வலத்தில், முதல் வரிசையில் அயோத்தி பால ராமர் அலங்காரத்துடன் செல்ல, அதனை பார்த்த அனைவரும் மெய்மறந்து ``ஜெய் ஸ்ரீ ராம்'' என்று முழக்கமிட்டனர்.


தன் அடுத்த வரிசையில், மோளங்கள் இசைக்கப்பட்டன. இது ரசிக்கும்படியாக இருந்தாலும், ஒரு ஜண்டை வாத்தியம் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.




மோளங்களுக்கு ஏற்றார் போல், சில பெண்கள் கோலாட்டம் அடித்து நடனமாடியது அருமையாக இருந்தது. அதன் பின் வரிசையில், அடாடா... சின்னஞ்சிறுக் குழந்தைகளின் கோலாட்டங்களும், நடனக்களும் காண்போரை ரசிக்கும்படியாக இருந்தது மட்டுமல்லாது, நம் சனாதன தர்மத்தை ஒருபோதும் யவராலும் அழிக்கமுடியாது என்கின்ற புதிய நம்பிக்கை பிறந்தது.



தன் பிறகு, பள்ளி மாணவிகளின் நடனங்கள் நம்மை மூழ்கடைய செய்தது. ஒவ்வொரு ராமரின் பக்தி பாடலுக்கு உயிர்வூட்டும் விதமாக அமைந்திருந்தது. ``பிரம்மமொக்கட்டே.......பர, பிரம்மமொக்கட்டே.......'' பாடலுக்கு மாணவிகள் நடனம் ஆடும்போது சிலரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


ர்வலம் முடியும் தருவாயில், ``வந்தே மாதரம்'' பாடலுக்கு மாணவிகள் நடனமாடியது, அங்கிருந்தவர்களை பூரிப்படைய செய்தது. இதுதான் நம் இந்து மதம். பிற மதங்களில் நாட்டு பற்று மிக மிக குறைவு. நமக்கு இந்திய திருநாடே பிரதானம். அதுனாலதான் நம்மை அவர்களால் (பிற மதத்தினர்) பிரிக்க முடியவில்லை. வந்தே மாதரம் பாடலுக்காக ஆடிய மாணவியர்களுக்கும், ஏற்பாடு செய்த திருமதி சாந்தி சர்வோத்தமன் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

டுத்ததாக, வேதகோஷ கோஷ்டிகள், மிக குறைந்த நபர்கள் இருந்தாலும், அவர்கள் சொன்ன வேத மந்திரங்கள் மனதை அமைதிப்படுத்தின.

தன் பின், கம்பீரமாக, முகத்தில் என்னவொரு தேஜஸ். ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர், குதிரை வண்டியில் (Horse Chariot) அமர்ந்து வர, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 


ன்று அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார் என்றால், அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவர் நம் பெஜாவர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் என்று சொன்னால் அது மிகை அல்ல!

இந்த நேரத்தில் நாம், பிருந்தாவனமாகிய ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்தரையும் நினைவு கூறியே ஆகவேண்டும்.

பிருந்தாவனமாகிய ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்தர்
யோத்தியில், ராமர் வரவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்தர் வழியில், ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர், தன் குருவின் ஆசையான, கனவான ராம ஜென்ம பூமியில் ராமரை பிரதிஷ்டை செய்தே ஆகவேண்டும் என்கின்ற முழுவீச்சில் அரும்பாடுபட்டார். அதற்கு பலனாக இன்று அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியே!

அயோத்தி பால ராமர் 

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் மடம் சார்பாக ஸ்வாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
யோத்தி என்று சொன்னால், பாபர் மசூதி இடிப்புதான் ஞாபகத்திற்கு வரும். பால ராமர் பிரதிஷ்டை ஆன பின்பு, ராமரின் கோயிலும், அவரின் அழகான முகமும்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் அமைவதற்கு, பலரும் காரணமாக இருக்கலாம். ஆனால், அதில் முக முக்கியமானவர், ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர். அதற்காக நாம் அனைவரும் அவரின் பாதங்களை தொட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சேவா & பஜனா மண்டலி திருவல்லிக்கேணி
வருக்கு பின்னால்,  ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சேவா & பஜனா மண்டலி திருவல்லிக்கேணி குழுவினர்கள் சார்பாக பஜனை கோஷ்டிகள், நம்மையே மறந்து ஆடும் அளவிற்கு பஜனை செய்தவாறு வந்தார்கள். அனைவரும் சீனியர் சிட்டிசன்கள். அவர்கள் அத்தனை நபர்களுக்கும் இந்த நேரத்தில் கோடான கோடி பாராட்டுக்கள். என்ன... வாணவேடிக்கை மட்டும் மிஸ்ஸிங்.

அஸ்வத்தாமன் - பாரதிய ஜனதா கட்சி 

ஹரிஷ் - பிரபல ஜோதிடர் 
ர்வம் முடிந்ததும், திருவல்லிக்கேணி ஸ்ரீ வியாசராஜ மடத்தில், ஸ்வாமிஜி உரையாற்றினார். இவ்விழாவில், பா.ஜ.கவை சேர்ந்த அஸ்வத்தாமன், பிரபல ஜோதிடர் ஹரிஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக, திரு.பிரஹலாத் பட் ஆங்கிலத்தில், ஸ்வாமிஜியை பற்றி பேசினார்.

ஸ்ரீ வியாசராஜ மடத்தின் மேனேஜர், திரு. ராமகிருஷ்ண ஆச்சார் பேசுகிறார் 
திருவல்லிக்கேணி ஸ்ரீ வியாசராஜ மடத்தின் மேனேஜர், திரு. ராமகிருஷ்ண ஆச்சார் தமிழில் ஸ்வாமிஜியை பற்றி மிக அழகாக வர்ணித்தார்.

ஸ்வாமிகளுடன் - அனந்த பத்மநாபாச்சாரியார் (APN)

அனந்த பத்மநாபாச்சாரியாருக்கு ஆசி வழங்கும் ஸ்வாமிகள் 
மேலும், ராமாயணத்தை சுட்டிக்காட்டி, ஒரு ஆகச் சிறந்த குரு சிஷ்யருக்கு எடுத்துக் காட்டு, நம் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் என்று ஸ்வாமிஜிக்கு புகழாரம் சேர்த்தார், திரு.அனந்த பத்மநாபாச்சாரியார் (APN). விழாவில், திரு. ஹரி மத்வா மற்றும் ஸ்ரீமதி அனுராதா ஸ்ரீதர் அவர்கள் தயாரித்த, ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தரை பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.

ஸ்வாமிகளுக்கு மரியாதை செய்வதற்காக - ப்ரவீன் ஆச்சார், உத்திராஜா மடம் திருவல்லிக்கேணி 

டைசியாக, உரையாற்றிய பெஜவார் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர், நம் இந்து தர்மத்தை காக்க வேண்டும். அதற்கு, குறைந்தது குழந்தைகளுக்கு நல்ல பெயரை சூட்டுங்கள். விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் இருந்து ஏதாவது ஒன்றை குழந்தைகளுக்கு வையுங்கள், என்று பேசினார். விழா முடிந்ததும். அனைவருக்கும் பழ மத்திராக்ஷத்தை வழங்கி ஆசீர்வதித்தார், ஸ்வாமிஜி.

ன்ன ஒரு அருமையான தொடக்கம்! சென்ற ஆண்டு சாதுர் மாத விரதத்தை முன்னிட்டு, பலிமார் மடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர் சென்னைக்கு வந்திருந்து அருளாசி வழங்கினார். இம்முறை, பெஜவார் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் வந்திருக்கின்றார். சென்னை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 60 நாட்கள் சென்னையில் இருக்கிறார், ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர். 60 நாட்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதில்லை.  ஆனால், ஸ்வாமிஜி நம் இடத்துக்கு வந்திருக்கின்றார். முடித்த வரை அவரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவரின் ஆசிகளை பெறுவோம்!

✏ ரா.ரெங்கராஜன்

தேதி: 23.07.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்