கொண்டாட்டம் கோலாகலம் / சென்னையில் உறியடி!


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்றைய தினம் (27.8.2024) சென்னையில் உள்ள ஸ்ரீ உடுப்பி கிருஷ்ண மடத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உறியடிதான் ஞாபகத்திற்கு வரும். இங்கும் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.


தில், பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர், உறியடி அடித்து பக்தர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் கிருஷ்ணருக்கு, ஸ்வாமிஜி தொட்டில் பூஜையும் செய்தார். கோயில் முகப்பில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


முன்னதாக, கிருஷ்ணரை அலங்கரித்து, தேர் வீதி உலாவும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.


தொட்டில் பூஜை முடிந்ததும், ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் பக்தர்களிடையே உரையாற்றினார். ``நம் தேகம்தான் (உடல்) ரதம். அந்த ரதத்தில், கிருஷ்ணனை அமரவைத்து ஆராதிக்க வேண்டும். கிருஷ்ணனை எங்கும் தேடவேண்டாம். உங்களிடத்தில், உங்கள் உள்ளத்தில்தான் இருக்கிறான். ஆகையால், முதலில் உங்களின் உள்ளத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ணனை ஆராதிக்கவும்.'' என்று கூறினார், விஷ்வ பிரசன்ன தீர்த்தர்.


நிறைவாக, அனைத்து பக்தர்களுக்கும் அவல் சாம்பார், ராய்த்தா, போண்டா, மைசூர் பாக், அவல் தயிர் என இரவு நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தேதி: 28.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

   

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்