பேராசிரியர் தாஸ்குப்தா எழுதிய ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் வரலாறு / மகத்துவமிக்க மத்வ மகான்கள்

``கத்துவமிக்க மத்வ மகான்கள்'' என்னும் பகுதியில், ஸ்ரீ மத்வாச்சாரியாரில் ஆரம்பித்து ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர், என்று பல மகான்களின் மகத்துவங்களை கண்டுவருகிறோம். அடுத்ததாக, இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் மகான், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர். இவரின் குரு, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்.

ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரமத்தில் (துறவியாக தீட்சை பெறுவதற்கு முன்பு) அவருக்கு சகோதரர் ஆவர். அதாவது, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு இரண்டு சீடர்கள். ஒருவர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், மற்றொருவர், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர். ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், புதியதாக வியாசராஜ மடத்தை ஸ்தாபிக்கிறார். ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர மடத்தை ஸ்தாபிக்கிறார்.

டத்தின் முழு சமஸ்தானமும் ஒன்றுகூடி மிக பெரிய விழா நடத்தி,  ஸ்ரீ கவீந்திர தீர்த்தருக்கு பட்டம் சூட்டினார்கள். இந்தியாவின் மிக சிறந்த அறிஞரான, பேராசிரியர் தாஸ்குப்தாவால் எழுதப்பட்ட "இந்திய தத்துவத்தின் வரலாறு" என்ற நூலில், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் துவைத தத்துவத்தையும் பற்றியும், அவரின் சில முக்கிய சீடர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும், ஸ்ரீ கவிந்திர தீர்த்தரை பற்றி மிக அழகாக வர்ணிக்கிறது அந்த புத்தகம்.

அதில் சிலவற்றை பார்ப்போம்:

* ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரம நாமம் (இயற்பெயர்) ஸ்ரீ விஷ்ணுதாசாசார்யா ஆகும்.

* ``வரதரத்னாவளி'' (Varadarathnavali) என்னும் மத்வ சித்தாந்தத்தை பற்றி கூறும் மிக முக்கிய நூலை, ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் இயற்றினார். இவர் படைத்த இந்த ``வரதரத்னாவளி'', ஆழமான படைப்பாகும்.

* ``வரதரத்னாவளி'' நூலை  ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், துறவியாகத் தொடங்குவதற்கு முன்பே இயற்றிவிட்டார்.

* தோராயமாக 1333 - ஆம் ஆண்டு முதல் 1398 - ஆம் ஆண்டுகள் வரை ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் வாழ்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

* தனது 65வது வயதில்,கர்நாடக மாநிலம், அம்பிக்கு அருகில் உள்ள ஆனேகுந்தியில், துங்கபத்ரா நதிகரை அருகில் பிருந்தாவனமானார். அந்த இடத்தை ``நவ பிருந்தாவனம்" என்னும் அழைப்பர்.

* இவரின் மூலமாகவே, ஸ்ரீ ராகவேந்திர மடம் உருவாகியுள்ளது.

* இவரை அனுதினமும் வேண்டிக் கொண்டால், ஞான, பக்தி, வைராக்கியத்தை தந்தருளி, மோக்ஷத்திற்கு வழிவகை செய்கிறார், என்கிறது அந்த நூல்.

அன்றைய காலகட்டத்தில் சஞ்சாரம் (ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பக்தர்களை அருள்வது) செய்வதென்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை, அவரின் காலம் முழுவதிலும் சஞ்சாரம் மேற்கொண்டிருக்கிறார் என்பது, அவரின் தவவலிமையை காட்டுகிறது. தனக்கு பின், ஸ்ரீ வாகீச தீர்த்தருக்கு பட்டத்தை கொடுத்தார், ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்.

எப்படி போவது? நவபிருந்தாவனம், துங்கபத்ரா நதியில் அமைந்துள்ளது. நவபிருந்தாவனம், கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தி அருகே உள்ள ஒரு சிறிய தீவு ஆகும். ஆனேகுந்தி, கங்காவதியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. ஆனேகுந்தியிலிருந்து துங்கபத்ரா நதியை படகில் கடந்து நவபிருந்தாவனத்தை  அடையலாம். 

நவபிருந்தாவனத்திற்கு செல்ல மற்றொரு வழி, ஹம்பி என்னும் ஊரில் இருந்தும் பயணிக்கலாம். பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பெட்டிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது, ஹம்பி. ஹம்பியில் இருந்து மீண்டும் துங்கபத்ரா நதியைக் கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம்.

vindrarudhapadasaktam rajendramunisevitam 

shrikavindramunim vande bhajatam candrasannibham

✒ ரா.ரெங்கராஜன்

தேதி: 02.09.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்