வளத்தை வாரி வரமருளும் வலம்புரி / Re - Post
வளத்தை வாரி வரமருளும் வலம்புரி
வலம்புரி சங்கு ஓர் அறிமுகம்:
✦ கடலில் வாழும் உயிரினங்களில், கிளிஞ்சல் வகை புழுக்கள் தன் பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.
✦ இதில், வலம்புரி சங்கு என்பது சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்காகும்.
✦ சங்குகள் வகைகளில் காணப்பட்டாலும் ``வலம்புரிச்சங்கு'' சிறப்பு தன்மையுடையதாக கருதப்படுகிறது.
✦ இவை வலது பக்கம் சுழிந்து காணப்படும்.
✦ மக்களின் புனிதமாக கருதப்படுகிறது.
✦ வளத்தையும், நலத்தையும் தருவதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
✦ இதன் காரணமாக, இந்த வலம்புரி சங்கினை அதிகதொகை கொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
![]() |
கேரள அரசு சின்னம் |
✦ ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், கேரள அரசு சின்னத்திலும், சிக்கிம் அரசு சின்னத்திலும், திருவிதாங்கூர் கொடியிலும் வலம்புரி சங்கு இடம்பெற்றிருக்கிறது.
✦ ஆம்! கேரள அரசு சின்னத்தில், இரண்டு யானைகளின் நடுவில் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் சங்கை காண்பது போல வலம்புரி சங்கு அடையாளப்படுத்துகிறது. அதற்கு மேல், நான்கு முகங்களை கொண்ட தேசிய சின்னமாகிய சாரநாத் சிங்கம் இடம்பெற்றுள்ளது.
✦ சிக்கிம் அரசு சின்னத்தில், மேலே முதலில் வலம்புரி சங்குதான் இருக்கும்.
![]() |
சிக்கிம் அரசு சின்னம் |
✦ அதற்கு அடுத்தபடியாக, முழு சிவப்பு நிறத்தில் நடுவில் வலம்புரி சங்கு இடம்பெற்றியிருக்கும் இது திருவிதாங்கூர் நாட்டின் சின்னமாகும்.
![]() |
திருவிதாங்கூர் நாட்டின் சின்னம் |
வலம்புரி சங்கின் சிறப்பு:
✦ மாதங்களில் விசேஷமான கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையில் சிவலிங்கத்திற்கு சங்காபிஷேகம் செய்வது சிறப்பு.
✦ கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) சிவலிங்கத்திற்கு செய்யப்படும் சங்காபிஷேகம் குறித்தும், வலம்புரி சங்கை பற்றியும் பல ஞான நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
✦ ஆன்மீகத்திலும், பூஜைகளிலும், பூஜை அறைகளிலும் வலம்புரி சங்கு முக்கியவையாக பார்க்கப்படுகிறது.
✦ வலம்புரி சங்கினை காதில் வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என்ற சப்தம் கேட்கும்.
வலம்புரி சங்கின் பயன்கள்:
✦ எங்கு வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கு குபேர கடாக்ஷம் நிறைந்து இருக்கும் என்கிறார்கள் ஆன்மீக சிந்தனையாளர்கள்.
✦ வலம்புரிச் சங்கில், கொஞ்சம் தீர்த்தமும், துளசியும் இட்டு பூஜை செய்து வந்தால், முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என வேத நூல்கள் கூறுகிறது.
✦ அதே போல், வலம்புரி சங்கைக்கொண்டு விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நம் மனமானது நிம்மதியடையும்.
✦ தினமும் சண்டைகள் நடக்கும் வீட்டில், அமைதி நிலவும்.
✦ கடன் பிரச்னைகள் தீரும்.
✦ செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கும், அங்காரகனுக்கும் வலம்புரிச்சங்கை கொண்டு பாலாபிஷேகம் செய்து வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கி. விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
✦ மேலும், வலம்புரி சங்கில் பால் வைத்து, 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்து வணங்கினால், எல்லா தோஷங்களும் நீங்கி திருமணம் நடைபெறும்.
✦ வலம்புரி சங்கிற்கு பௌர்ணமி தினத்தன்று பாலாபிஷேகம் செய்தால் சந்திர பகவானின் அருளையும் பெறமுடியும்.
✦ தினமும் இந்த வலம்புரி சங்கில் தண்ணீர் வைத்து, துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.
✦ பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கத்தால் பால் புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். அதோடு கண்திருஷ்டி ஏற்படாது.
சங்கிற்கான காயத்ரி மந்திரம்:
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்
சங்கிற்கான காயத்ரி மந்திரங்களில் ஒன்றாகும். இதைத் தினமும் ஸ்நானம் செய்த பிறகு 12 முறைகள் சொல்லி தூபம், நைவேத்தியம், தீபம் போன்றவற்றை செய்து வரலாம்.
வலம்புரி சங்கை பராமரிக்கும் முறைகள்:
✦ சங்கை ஒரு மரப்பெட்டியில் மஞ்சள் பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு வெல்வெட் துணி விரித்து அதில்தான் வைக்க வேண்டும்.
✦ இல்லையென்றால், அதற்கான செம்பு அல்லது வெள்ளி ஸ்டாண்டில் அதைத் தென்வடலாக வைக்க வேண்டும்.
✦ தினமும் காலையில் அதைச் சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, பொட்டிட்டு, மலர்தூவி, கற்பூர ஆரத்தி காட்டி, சங்கத்திற்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வரலாம்.
எச்சரிக்கை:
✦ பொதுவாக வலம்புரி சங்கினை காலியாக இருக்க வைக்க கூடாது.
✦ தரையில் வைக்கவே கூடாது.
✦ வலம்புரி சங்கிற்கு தண்ணீரை கொண்டாவது அபிஷேகம் செய்ய வேண்டும்.
✦ வலம்புரி சங்கின் மீது அழுக்கு, தூசி படிய விடக்கூடாது.
✦ சங்கு கடலில் இருக்கும் பொருள். அதனை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் துர்வாடை ஏற்பட்டு வீட்டிற்கு கேடு ஏற்படலாம்.
✦ ஆகையால், அபிஷேகம் செய்யவில்லை என்றாலும், தினமும் துணிகளினால் அவசியம் சுத்தம் செய்யவேண்டும். (புதிய துணியாக இருக்க வேண்டும்)
இவைகளை பின்பற்றி, பூஜித்து வந்தால் நிச்சயம் வலம்புரி வளத்தை வாரி வழங்கும்.
✏ ரா.ரெங்கராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 25.11.2024
கருத்துகள்
கருத்துரையிடுக