அபூர்வ முத்திரையின் ரகசியம் / சிறப்பு கட்டுரை

லக மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய நோய்த்தாக்கங்கள் தடுத்து நிறுத்த, நீக்க அல்லது அதற்கு காரணமானவர்களின் சூழ்ச்சியை முறியடித்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த மறைக்கப்பட்ட ரகசியத்தை முதல் முதலாக வெளியிடுகிறேன். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய முத்திரை தியானத்தில் ஈடுபடலாம். 

இந்த உலகத்தில் தீமையின் சக்திகள் நீங்கி சத்தியம், தர்மம், நியாயம் நிலைக்க வேண்டும். மக்களின் அச்சத்தை நீக்கி பூரண ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை இறை ஆற்றல் உடனடியாக தர கூடிய அபூர்வ தியான முறை...

முத்திரை பயிற்சியில், விரல்களின் பங்களிப்பு மற்றும் தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு சில முக்கிய குறிப்புகளை மட்டும் இங்கு சுருக்கமாக கூறுகிறேன்.

கட்டை விரல் என்பது நெருப்பை குறிக்கும்: 

நெருப்பு என்ற பூதம் மட்டுமே தன்னுடன் சேரும் அனைத்து பொருட்களையும் எரித்து சுத்தமாக்கி தனக்குள் ஐக்கியமாக்கிக் கொள்ளும். அதாவது அந்த பொருட்களின் கழிவுகளை நீக்கி அனைத்தையும் சுத்தமாக்குகிறது. 

அடுத்ததாக காற்று பூதத்தை குறிக்கும் ஆள்காட்டிவிரல் குறித்து பார்ப்போம்:

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைப்பதன் மூலம் நெருப்பு மற்றும் காற்றை இணைக்கிறோம். இதன் மூலம் காற்று எனும் பூதத்தின் கழிவுகளை எரித்து சுத்தமாக்குகிறது. அதாவது சுவாச மண்டலம் சுத்தமாகிறது.

தாவோயிசத்தில் கூறப்பட்ட அக்குபஞ்சர் தத்துவத்தில் கட்டை விரல் என்பது நுரையீரலையும் ஆள்காட்டி விரல் என்பது பெருங்குடலையும் குறிக்கிறது. அதாவது நுரையீரலின் துணை உறுப்பு பெருங்குடல். கட்டைவிரல் என்பது*யின்*(Yin) தத்துவமாகவும், ஆள்காட்டி விரல் என்பது*யாங்* (Yang) தத்துவமாகவும், செயல்படுகிறது. இந்த*யின்* மற்றும் *யாங்* விரல்களை இணைப்பதன் மூலம் Yin Yang சுழற்சி சீராக நடைபெறுகிறது.

சுவாச மண்டலத்தின் உதவியுடன் உடலுக்கு தேவையான பிராண சக்தியை பெறுகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. நுரையீரல் என்பது பிராணனையும், பெருங்குடல் என்பது அபான வாயுவையும் குறிக்கிறது. இந்த பிராண - அபான வாயுவின் சீரான இயக்கமே உடலின் சக்தியை சமநிலைப்படுத்துகிறது. யோக மரபில் கூறப்பட்ட ஞான முத்திரையின் மறைவான தத்துவம் இதுதான்.

சின் முத்திரை

இந்த *யின் யாங்* தத்துவ அடிப்படையில், வேறு எந்த இரண்டு விரலையும் இணைக்க வழியில்லை. ஏனெனில் மனித உடலின் வடிவமைப்பு அவ்வாறு படைக்கபட்டுள்ளது. ஆனாலும், வேறு விரல்களின் தன்மையை கொண்டு நமக்கு தேவையான விளைவுகளை பெற முடியும்.

மேலும், கட்டை விரலின் நுனிப்பகுதியில் மூளையின் நரம்புகள் மற்றும் சுரப்பிகளை தூண்டக்கூடிய வர்ம புள்ளிகள் மற்றும் அக்குபஞ்சர் புள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தியானத்தில் இந்த ஞான முத்திரையை கடைபிடிப்பதன் மூலம் மனம் அமைதி அடைகிறது. தியான நிலை கூடுகிறது என்றும் கூறப்படுகிறது. இதேபோல, நடுவிரல் ஆகாயத்தையும் மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன. 

கட்டை விரலுடன் இணைக்கப்படும் விரல்கள் அல்லது பூதத்தின் தன்மையைப் பொருத்து, குறிப்பிட்ட பூதத்தின் கழிவுகள் சுத்தமாகிறது.

முத்திரை பயிற்சியின் ரகசியம்:

இது மட்டுமல்லாமல், நமது உள்ளங்கையில் மற்ற விரல்களில் கிரகங்களின் தன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வகையில் ஆள்காட்டி விரல் என்பது குரு கிரகத்தையும், நடுவிரல் என்பது சனி கிரகத்தையும், மோதிர விரல் என்பது சூரிய கிரகத்தையும், சுண்டு விரல் என்பது புதன் கிரகத்தையும் குறிக்கிறது. கட்டைவிரல் நுனி புளூட்டோ கிரகத்தை குறிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஆள்காட்டி விரலின் மூன்றாவதாக ரேகைக்கு அடியில் உள்ள மேடு குரு மேடு என்றும், நடு விரலின் மூன்றாவது ரேகைக்கு கீழே உள்ள மேடு சனி மேடு என்றும், மோதிர விரலின் மூன்றாவது ரேகைக்கு கீழே உள்ள மேடு சூரிய மேடு என்றும், சுண்டு விரலின் மூன்றாவது ரேகைக்கு கீழே உள்ள மேடு புதன் மேடு என்றும், குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு விரலும், ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில், கட்டை விரலின் நுனி அதற்குரிய தன்மையை பார்ப்போம் கட்டை விரல் நுனி கிரக காரகத்துவம் புளூட்டோ கிரகத்தின் தன்மை (Rebuilding, elimination, legacies, construction, destruction, crime, groups, taxes, insurance, wills.)

மறுகட்டமைப்பு

வெளியேற்றுதல்

மரபுகள், பாரம்பரியம்

கட்டமைத்தல்

அழித்தல்,

குற்றம்

குழுக்கள்

வரி

காப்பீடு

உயில் பத்திரம், பாரம்பரிய சொத்து

சனி கிரகத்தின் தன்மை மற்றும் நடுவிரல் மற்றும் சனி மேடு கிரக தத்துவம்

(Stability, the elderly, teachers, boundaries, enemies, discipline, persistence, punishment, reputation.)

ஸ்திரத்தன்மை

முதியவர்கள்

ஆசிரியர், குரு

எல்லைகள்

எதிரிகள், விரோதிகள், தீயவர்கள், தீமையான விசயங்கள்

ஒழுக்கம்

விடாமுயற்சி

தண்டனை

நற்பெயர்

இது போன்று பல விரல்களை பயன்படுத்தி அந்தந்த விரல்களின் கிரக தத்துவத்தை செயல்படுத்துவதே முத்திரை பயிற்சிகளின் முக்கியமான அம்சம். எனவே கட்டைவிரல், நுனியின் தத்துவமாகிய மறுக்கட்டமைப்பு என்ற தத்துவம் அதாவது சரியில்லாத ஒன்றை சரிபடுத்தி சமநிலைக்கு கொண்டு வருதல் என்று அர்த்தம்.

மேலும், "அழித்தல்" என்ற தன்மை அதாவது சரியில்லாத தீமையான ஒன்றை அழித்தல் என்று பொருள்.  "வெளியேற்றுதல்" என்ற தன்மையும் இதே போல குறிப்பிடப்படுகிறது.

கட்டை விரலை உயர்த்தி காட்டும் குறியீடு மற்றும் லிங்க முத்திரை போன்றவற்றின் ரகசியம் இப்போது புரிந்திருக்கும்.

லிங்க முத்திரை

மேலும், நடு விரலாகிய சனி விரல் மற்றும் சனி மேடு ஆகியவற்றின் தன்மையாகிய

ஸ்திரத்தன்மை

எதிரிகள்

தண்டனை

தீமையான விசயங்கள்

போன்ற சில தன்மையை குறிக்கிறது. அந்த வகையில், வலது கை கட்டை விரலையும் இடது கை சனி மேட்டையும் இணைப்பதன் மூலம் இரண்டு விரல்களின் தத்துவங்கள் செயல்பாட்டுக்கு வருகிறது.அதாவது விரோதிகள் மற்றும் எதிரிகளை தடுப்பது தண்டிப்பது சூழ்ச்சிகள் தடுப்பது தீமையை அழிப்பது.

சுருக்கமாக சொன்னால், சனி கிரகத்தால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, மன உலைச்சல், பொருளாதார சிக்கல் போன்ற அனைத்து வகையான பாதகத்தையும் குறைப்பது என்று அர்த்தம். இது கட்டை விரல் நுனியின் வெளியேற்றுதல் தடுத்தல் அழித்தல் சமநிலை படுத்தல் போன்ற தத்துவத்தின் துணையுடன் செயல்படுத்த படுகிறது.

குருமார்கள் கட்டை விரலால் தீட்சை கொடுப்பதன் ரகசியமும் இதுதான். எனவே, இந்த தியானத்தில் உங்கள் நோக்கம் என்ன என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மேலும், சுயநல வேண்டுதலாக இல்லாமல் பொதுநலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ரகசியத்தை கூறுகிறேன்.

தற்போது உள்ள சூழலில் மனித குலத்திற்கு எதிரியாக விளங்கும் விஷயங்கள் தடுத்து நிறுத்தவோ அழிக்கவோ வெளியேற்றவோ, நவகிரகங்கள் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முத்திரை தியானம் வெளியிடப்படுகிறது.

நன்றி:சித்தர்களின் குரல் சிவசங்கர் முகநூல் பக்க நகல் பதிவு

-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 22.12.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்