பழந்துயரங்களை போக்கும் போகிப் பண்டிகை - 13.01.2025 / சிறப்புக் கட்டுரை


மா
ர்கழி மாதத்தின் கடைசி நாள். இந்த நாளை போகி போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? இதன் தாத்பரியம் என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ளலாமா?

மார்கழி மாதம் தனுர் மாதம். தேவர்களுக்கு இது விடியல்காலை மாதம். சூரியன் தன்னுடைய தட்சிணாயனம் முடித்துக் கொண்டு, உத்தராயணத்தில் பிரவேசிப்பதற்கு முதல் நாள் இந்த நாள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

ந்த தை மாதத்திற்கு முதல் நாள் என்பதால், இந்த நாளை விசேஷமாக கொண்டாடுகிறோம். நல்ல கணவன் கிடைக்க வேண்டும். கண்ணனை போன்ற கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைத்து இப்பொழுதும் மார்கழி மாதத்தில் பல பெண்கள் நோன்பு இருப்பார்கள். 

ந்த போகிப் பண்டிகை அன்று பல வைணவ ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது உண்டு. இந்த சேர்த்தி உற்சவத்தை அன்று போய் சேவிப்பதன் மூலமாக, நம்முடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவுபெறும்.

ன்று ஆண்டவனை நினைத்து மங்களகரமான விஷயங்கள் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்தத் தடைகள் எல்லாம் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் நீங்கிவிடும். தை மாதத்தில் ஒரு வழி பிறக்கும். அதனால்தான் “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று சொன்னார்கள்.

ந்த போகி நாள் `பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழைய விஷயங்கள் போகும்நாள். இந்த நாளில் நாம் இறைவனை வழிபடுவதன் மூலம் பழந்துயரங்கள் அழியும். புது ரத்தம் பாய்வது போல தை மாதத்தை வரவேற்கும் புதிய மகிழ்ச்சிகரமான உற்சாகமான எண்ணங்கள் பிறக்கும்.

ழைய கஷ்டங்கள் நீங்கி உற்சாகம் பிறந்துவிடும் அல்லவா. பழைய துன்பங்களை `போக்கி’ நிற்கும் நாள் என்பதால் போக்கி பண்டிகையானது. அதுவே நாளடைவில் மருவி `போகி’ என்றாகிவிட்டது. 

க்கால வழக்கப்படி, ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. நல்லதோ கெட்டதோ அனுபவித்து விட்டோம் இனி திரும்ப வராது, சென்று வா என்று கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை ஒழித்துக்கட்டி வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். 

வற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ர கீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

தையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். அக்காலத்தில் அனேகமாக எல்லோருமே இயன்ற அளவு வெளி சுவருக்கு சுண்ணாம்பு அடித்து வர்ணம் தீட்டுவார்கள். போகி அன்று, வைகறையில் `நிலைப்பொங்கல்’ நிகழ்வுறும்.

வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் புதிய வாழ்வு கிடைக்கும். இதற்கு அடுத்த நாள் பொங்கல் பண்டிகை. அந்த பொங்கல் பண்டிகையை வரவேற்க பண்டிகை போகி பண்டிகை போகியன்று வீட்டின் கூரையில் அந்தகாலத்தில் பூலாப்பூ செருகி வைக்கப்படும். 

போகி அன்று பழைய பொருட்களை மொத்தமாக தீயிட்டு கொளுத்துவார்கள் அப்பொழுது குழந்தைகள் குதுகளிப்பார்கள். இதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

டந்த காலத்தில் நடந்த நல்லதுக்கு நன்றி தெரிவித்து, இனிவரும் காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து இறைவனுக்கு போளி, வடை, பாயசம், செய்து நிவேதனம் செய்யுங்கள். வீட்டில் பழைய விஷயங்கள் தேவையில்லாத பொருட்களை சுத்தப்படுத்தி, முறையாக அப்புறப்படுத்துங்கள். கடந்த காலத்தில் குப்பையைப் போல இருக்கக்கூடிய எண்ணங்களையும் தூக்கி தூரப் போடுங்கள்.

ந்த மூன்று விஷயங்களை செய்வதன் மூலமாக வருகின்ற நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 12.01.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்