வாஸ்து முறைப்படி வீட்டில் பணம், நகை..... / கேள்வி பதில்

வாஸ்து முறைப்படி ஒரு வீட்டில் பணம், நகை, துணிமணிகளை வைத்துக்கொள்ளும் பீரோவானது எங்கு அமைய வேண்டும்?

- கு.ராஜசேகர், திருச்சி.

முதலில் இவை மூன்றையும் ஒன்றாக வைக்கலாமா என்பதைத் தெரிந்துகொள்வோம். பணம், நகை இரண்டையும் ஒன்றாக ஒரே பீரோவில் வைக்கலாம். இதில் நாம் அணியும் ஆடைகளை வைக்கக் கூடாது. ஏனென்றால் நாம் ஒரு முறை அந்த ஆடையை அணிந்தாலே நமது வியர்வையின் மூலம் நமக்குள்ளே இருக்கும் துர்குணங்களும் தோஷங்களும் அந்த ஆடையில் ஒட்டிக் கொள்ளும். வியர்வையில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். நாம் ஒரு முறைகூட அணிந்து பார்க்காத புத்தம்புதிய விலை உயர்ந்த பட்டு ஆடைகளை வேண்டுமானால் பணம் மற்றும் நகை உள்ள பீரோவில் வைக்கலாம். 
மற்றபடி பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை வைப்பதற்கு என்று தனியாகத்தான் ஒரு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இது குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு திசையில் உள்ள அறையில் வைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் அறை ஏதும் இல்லை என்றால், நீங்கள் எந்த அறையில் பீரோவை வைக்கிறீர்களோ அந்த அறைக்குள் வடக்கு திசையில் வைப்பதும் செல்வ வளர்ச்சியைத் தரும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 06.01.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்