சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்? / கேள்வி - பதில்


சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்? 

- ஆதிலட்சுமி, ராஜபாளையம்.

பகவான் கண்ணனை நினைத்துக் கொள்ளுங்கள். 

“வசுதேவ சுதம் தேவம் கம்ச 
சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் 
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” 

 - என்ற சுலோகம் சொல்லுங்கள். 

 திருச்சிராப்பள்ளி தாயுமானவஸ்வாமியை பிரார்த்தனை செய்யுங்கள். அம்பாளை வணங்குபவர்களுக்கு இந்த சுலோகம் உதவும்.

``நமஸ்தேஸ்து ஜகன்மாத: கருணாம்ருத ஸாகரே
கர்ப்ப ரக்ஷாகரி தேவி ஸுகப்ரசவ மேவஹி!’’

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பிகையை தினமும் வழிபடுங்கள். “உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவளே! கருணைக் கடலாகத் திகழ்பவளே! கருவில் உள்ள உயிரைக் காப்பவளே! சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவாய்’’ என்பது இந்தச் சுலோகத்தின் பொருள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 28.01.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்