மத்வ மஹான்களின் பெருமைகள் / தமிழில் உபன்யாசம் - லக்ஷ்மிபதி ராஜா
கடந்த ஞாயிறு அன்று, அம்பத்தூரில் உள்ள ``யோகி ராகவேந்திர மடத்தில்'' பிரஸங்க பூஷணம், பிரவச்சனம் பூஷணம், மத்வ ரத்னா திரு. லக்ஷ்மிபதி ராஜா அவர்களின் ஒரு நாள் தொடர் உபன்யாசம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தார்கள்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உபன்யாசம், ஸ்ரீ மத்வாச்சாரியார், ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜதீர்த்தர், ஸ்ரீ வாதிராஜதீர்த்தர், ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர், ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என பத்து மஹான்களை பற்றி உபன்யாசத்தை சுமார் மாலை 5.30 மணி அளவில் நிறைவுபெற்றது.
இடையிடையில் ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் போன்ற மஹான்களையும் சொல்லி பரவசத்தை ஏற்படுத்தினார். அதுவும் தமிழில் மிக சரளமாக உரை நிகழ்த்தியிருக்கிறார்.
காலையில் சிற்றுண்டி, பிற்பகலில் (சாம்பார் சாதம், சக்கரைப்பொங்கல், கொஜ்ஜூ, தயிர் சாதம்) தீர்த்த பிரசாதம், இடையில் சூடான பானகம், அவல் போண்டா, கேசரி, டீ என மடத்தின் நிர்வாகிகள் அசத்திவிட்டார்கள். செவிக்கும் விருந்தானது, வயிற்றுக்கும் விருந்தானது, புண்ணியமும் கிடைத்தது என பக்தர்கள் நிறைந்த மனதோடு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிகழ்வின் இறுதியில், மடத்தின் சார்பாக விஜயேந்திரன் அவர்கள், லக்ஷ்மிபதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யதார். ``இன்னும் லக்ஷ்மிபதி அவர்கள் என்ன நிகழ்ச்சிகளை செய்ய வேண்டுமோ அவைகளை செய்யலாம்'' என விஜயேந்திரன் உறுதியளித்தார். ``உபன்யாசத்திற்கு பெரியோர்கள் வருவது முக்கியமில்லை. பெரியவர்களோடு குழந்தைகளும் வரவேண்டும் குழந்தைகளை அழைத்துவரவேண்டும்'' என உபன்யாசகர் லக்ஷ்மிபதி ராஜாவின் தாயார் வேண்டுகோள் விடுத்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 07.01.2025
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக