மகத்தான மகான் மத்வர்! / மத்வ நவமி - 06.02.2025

 

லரும் அறியப்படாத மகான்களில் ஒருவர் ``ஸ்ரீ மத்வாச்சாரியார்’’. 1238ல் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள பாஜகா என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் வாசுதேவர் ஆகும். இவரை பற்றி சுருக்கமாக எளிமையாக சொல்ல வேண்டுமானால், அத்வைதம், விசிஷ்டா துவைதம், துவைதம் என இந்தியாவின் மூன்று மிக பெரிய தத்துவ போதகங்கள் இருக்கின்றன.

த்வைதத்தை, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரும், விசிஷ்டா துவைதத்தை, ஸ்ரீ ராமானுஜரும், துவைதத்தை, ஸ்ரீ மத்வாச்சாரியாரும் நிர்மாணம் செய்து பக்தர்களுக்கு நல்வழி காட்டினர். 

த்வர், எட்டு வயதிலேயே துறவியானாவர். துறவியானதும், ஸ்ரீ மத்வாச்சாரியாருக்கு ``பூர்ணப் பிரக்ஞர்’’ என்கின்ற பெயர் உருவானது.

மத்வரின் மூன்று பிறவி

னுமா, பீமா, மத்வா என மத்வாச்சாரியார் தனது மூன்று பிறவிகளில் எடுத்த அவதாரங்கலாகும். இவைகளை குறித்த விரிவான ஆதாரங்களும், தகவல்களும் பல மத்வ நூல்களில் குறிப்பிடபடுகின்றன. அனுமனாக அவதரித்த காரணத்தால், “முக்கியப் பிராணர்’’ என்கின்ற மற்றொரு பெயரும் மத்வருக்கு உண்டு.

மத்வர் இயற்றிய நூல்கள்

`பிரம்ம சூத்திரம்’, சில `உபநிஷத்துக்கள்’, `பகவத் கீதை’ முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதியுள்ளார். இவைகளை எழுதுவதற்கு முன்னால், 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார். ஸ்ரீ மத் பாகவதத்திலிருந்து 1600 ஸ்லோகங்களை எடுத்து, அவைகளுக்கு உரை இயற்றினார்.

``காபாரத தாத்பர்ய நிர்ணயம்’’ என்றொரு நூல், இவர் இயற்றியதில் மிக முக்கியமான நூலாகும். 32 அத்தியாயங்களைக் கொண்டது. மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துரைத்து, 1600 ஸ்லோகங்களை எடுத்து, அவைகளுக்கு உரை இயற்றினார். மத்வாச்சாரியார்தான் முதன்முதலில் பாகவதத்தை, தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்துரைத்தார் என்று கூறப்படுகிறது.

உடுப்பி கிருஷ்ணரும், மத்வரும்

த்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த, பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள், அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய ``மத்வவிஜயம்’’ என்ற நூலில் உள்ளன. அதில், மிக முக்கியமான ஒன்று உடுப்பியில், கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்தது. அதை பற்றிய சுவாரசியமான தகவல்களை காண்போம்.

ரு சமயம் உடுப்பி அருகே கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது, எது கரையென்று தெரியாமல், அந்த கப்பல் புயலில் சிக்கியது. இதை கவனித்தவாறு கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர், கிருஷ்ண ஜபம் செய்து தன் மேல் ஒரு துணியை உயர்த்தி காற்றில் வீசிக்காட்டினார். அதைப் பார்த்த கப்பலோட்டி, அதன் திசைநோக்கி கப்பலை நகர்த்தினார்.

ப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் ஆபத்திலிருந்து தப்பி கரைக்கு வந்தடைந்தார்கள். கப்பலின் தலைவன் மத்வரை வணங்கி, அவரிடம் இருந்த ஒரு வைரக்கற்களை மத்வருக்கு கொடுத்தார். மெல்லிய சிரிப்புடன் அதனை வாங்க மறுத்த மத்வர், ``இதைவிட விலைமதிப்பற்ற ஒரு வைடூரியம் உங்களிடம் இருக்கிறது அவைதான் எனக்கு வேண்டும்’’ என்று மத்வர்கூற, குழம்பி நின்றார் அந்த தலைவன்.

ம்! ``கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தால் ஆன ஒரு பாறை இருக்கிறது. அதுதான் தனக்கு வேண்டும் என்று கூறினார். மத்வர் இப்படி கூறியதும், கப்பலின் தலைவனுக்கு ஆச்சரியம்.

ரு அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே! அதை வேறு வைடூரியம் என்று கூறுகிறாரே! என்று வியந்த கப்பல் தலைவர், அந்த கற்பாறையை எடுத்துக் கொடுத்தார்.

தனுள் தன் கையை விட்டு, சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார், மத்வர். கிருஷ்ணனின் முகத்தில் அளவில்லா தேஜஸ். இதனைக் கண்ட கப்பலின் தலைவன், தன் தவறை உணர்ந்து தன் இரு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை வேண்டினான். பிறகு மத்வர், தானே அந்த விக்கிரகத்தைத் தலையின் மேல் தூக்கிக் கொண்டு சென்று, அவர் பிறந்த பாஜகா என்னும் இடத்தின் அருகிலேயே இருக்கும் உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் தற்போது உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.

வ்விக்கிரகத்தைப் பற்றி அவர் வெளிப் படுத்திய தகவல் பெரிய விந்தை. ‘விஸ்வகர்மா’ என்ற தெய்வச் சிற்பியால் செய்யப்பட்டு, துவாபரயுகத்தில், துவாரகையில், ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பின்னர், துவாரகை மூழ்கியபோது, கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’!

ஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம், அவர்களைக் காண கிருஷ்ணர் அடிக்கடி தேடிச் சென்றதால், கிருஷ்ணர் வெளியே செல்லும் நாட்களில், பாதபூஜை செய்ய முடியாத ருக்மிணிதேவி வருந்தியதால், தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணிதேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர இட்ட கட்டளையின்படி, விஷ்வகர்மா செய்த கிருஷ்ணனே அது.

துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத சமயத்தில், மகான்களும், மக்களும் வழிபட்ட கிருஷ்ண விக்கிரகமும் இதுவே. துவாரகை, கடலில் மூழ்கிய போது, ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி, பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், மத்வர் கையில் வெளிப்பட்டது.

கனகன கின்டி

த்வாச்சாரியார், கிருஷ்ணர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், பலரும் கிருஷ்ணனை வழிபட்டு வந்தார்கள். ஒரு நாள், பக்தன் ஒருவர் கிருஷ்ணனை தரிசிக்க உடுப்பிக்கு வந்தார். அவரை கோயிலினுள்ளே அனுமதிக்கவில்லை. உடனே, கிருஷ்ணரின் மேல் வைராக்கிய பாடல் ஒன்றை பாட, அந்த பாடலில் மயங்கி, பக்தருக்காக உடுப்பி கிருஷ்ணர் தன் இடத்திலிருந்து, மெல்லத் திரும்பி மேற்கு நோக்கி காட்சிதந்தார். அளவற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் பக்தர். அந்த பத்தர் வேறுயாருமில்லை, தாசர்களிலேயே சிறந்த தாசரான `கனகதாசர்’ ஆவார். கனகதாசருக்காக காட்சியளித்த அந்த ஒன்பது துவாரத்தின் வாயிலாகத்தான் இன்றும் பக்தர்கள், உடுப்பி கிருஷ்ணனை தரிசித்து வருகிறார்கள். அந்த இடத்தின் பெயர்தான் ``கனகன கின்டி’’.

எட்டு மடாதிபதிகள்

த்வரின் துவைத சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து சொல்வதற்காகவும், தனக்கு பின் கிருஷ்ணரை பூஜிக்க, கிருஷ்ணபுர மடம், சீரூர் மடம், காணியூர் மடம், சோதே மடம், பாலிமர் மடம், அதமார் மடம், பேஜாவர் மடம், புத்திகே மடம் என்ற அஷ்ட மடங்களை (8 மடங்கள்) மத்வர் ஸ்தாபித்தாா். இந்த எட்டு மடங்களுக்கும் தனித் தனியாக மடாதிபதிகள் உள்ளனா்.

வர்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை சூழற்சி முறையில் கிருஷ்ணரை பூஜை செய்து வருவாா்கள். இதற்கு ‘‘பர்யாய” (பீடத்தில் அமருவது) என்று பெயா். கோவில் வெளியே, விறகுகளினால் மிகப் பெரிய தேரை போன்று அடுக்கி இருப்பாா்கள். மடாதிபதிகள் தங்களின் பர்யாய காலம் முடிவடைவதற்குள், ஒரு விறகுகூட மிஞ்சாமல், அந்த விறகுகளைக் கொண்டு நித்ய அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி செய்து முடித்தால்தான் பீடாதிபதிகளின் பர்யாய முழுமையடைகிறது. ஆகையால், உடுப்பியில் மடாதிபதிகள், அன்னதானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மத்வரின் இல்லம்

டுப்பி கிருஷ்ணா் கோவிலிலிருந்து சுமாா் 12 கி.மீ., தொலைவில் பாஜகா ஷேத்திரம் உள்ளது. அங்கு சிரிய மலைக்கு மேல் மத்வரின் இல்லம் இருக்கிறது. இங்குதான் மத்வாச்சாரியாா் பிறந்தாா். அந்தக் காலத்தில் மத்வரின் குடும்பம் பயன்படுத்தி வந்த பொருட்களை குறிப்பாக உரல், அம்மிக்கல், போன்றவைகளை அவரின் நினைவாக இன்றும் இந்த இடத்தில் பராமரித்து வருகின்றாா்கள்.

ரு முறை மத்வரின் தாய், மலையின் அடிவாரத்திலிருந்து மத்வரை அழைத்தபோது, ஒரு நொடியில் மத்வா் கிழே குதித்துள்ளாா். குதித்தபோது பதிந்த மத்வரின் பாதச் சுவடுகளை இன்றும் அங்கு சென்றால் பாா்க்க முடியும்.

மேலும், அவர் இல்லத்தின் அருகே மத்வா் நட்டு வைத்த புளிய மரம், இன்று வரை வாடாமல், விழாமல் இருப்பதைப் பாா்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

தில் என்ன ஆச்சரியம்? மத்வா் மகான் அல்லவா! என எனக்குள் நானே கூறிக் கொள்கிறேன். இதே போன்று நம் வாழ்க்கையிலும் வாடாமல், விழாமல் இருக்க ஒரு முறையாவது நிச்சயம் உடுப்பி கிருஷ்ணரையும், பாஜகா ஷேத்திரத்தில் உள்ள மத்வாச்சாரியாரின் வீட்டையும் தரிசித்து வரலாம்.

கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து 56 கி.மீ., தொலைவில் உடுப்பி உள்ளது. அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் பாஜகாஷேத்திரம் உள்ளது.

 - ரா.ரெங்கராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 05.02.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்