இந்தியில் பேசும் இஸ்லாமியர்கள்! / இந்துக்கள் இளிச்சவாயன்...
ஆசிரியர் பகுதி
அன்பு வாசர்களே நலமா..? இன்னும் மும்மொழி கொள்கை பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. மாணாக்களுக்கு மும்மொழி வேண்டுமா வேண்டாமா என்பது உள்ளே நாம் போக விரும்புவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நச்சுனு சொல்லிவிட்டு போகிறேன். தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு தமிழை தவிர, உருது, இந்தி, ஆங்கிலம் மற்றும் சிலருக்கு இதை தவிர அதிகப்படியான ஒரு மொழி தெரிந்திருக்கும்.
அதே போல், தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ நண்பர்களுக்கு தமிழை தவிர்த்து அவர்கள் ஆங்கிலத்தில் மிகுந்த புலமையோடு இருப்பார்கள், காரணம் அவர்களின் தேவாலயத்தில் இருக்கக்கூடிய பாதிரியார்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அவர் அங்கு வரும் மாணாக்களுக்கு ஆங்கிலத்தை நன்கு பயிச்சியினை கொடுப்பார், ஆகையால் அவர்கள் ஆங்கிலத்தில் அறிவானவர்களாக விளங்குவர். சிலருக்கு இதை தவிர வேறு ஒரு மொழியும் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆக, இஸ்லாமிய - கிறித்துவ நண்பர்களுக்கு பிறப்புலேயே அவர்கள் தமிழை தவிர வேறு சில மொழிகளை கற்கிறார்கள். நம் இந்து சொந்தங்கள்? மிக பெரிய கேள்விக்குறிதான்.
எனக்கு நடந்த அனுபவத்தை நான் இங்கு பதிவு செய்கிறேன். சில தினங்களுக்கு முன்பு, தேநீர் அருந்துவதற்கு தேநீர் கடைக்கு சென்றேன். அங்கு ஒரு வடநாட்டு பையன் வேலைசெய்துக்கொண்டிருந்தான். அவனிடத்தில் தட்டுத்தடுமாறி ஒரு டீ, இரண்டு பிஸ்கட் வேண்டும் என்றேன். அவனும் கொடுத்தான். சற்று நேரத்தில் எனக்கு பின்னால் வந்த ஒரு இஸ்லாமிய நண்பர், `ஏக் சாய்... தோ சமோசா, டாப் ஏக் ரொட்டி சஹானா'' என்றார். அப்போதுதான் நான் மும்மொழி கொள்கையின் அவசியத்தை உணர்ந்தேன்.
இது ஒருபுறமிருக்க,``ஏற்கனவே நம் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் இருக்கிறது'' என்று மூத்த பத்திரிக்கையாளர் ரெங்கராஜ் பாண்டே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதாவது, தனியார் பள்ளிகளில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியோ, பிரெஞ்சு மொழியோ அல்லது ஜப்பனீஸ் மொழியோ கற்றுக்கொள்ளலாம். இதைத்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன், ``நான் பிரெஞ்சு மொழி எடுத்துருக்கேன், தமிழ் மொழி எடுக்கவில்லை'' என வெள்ளந்தியாக அந்த சிறுவன் பதிலளித்தார்.
ஆக, அரசு பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கை. என்ன அநியாயம்?!
கருத்துகள்
கருத்துரையிடுக