மகுடமிடும் வாசகர்கள் / கடிதங்கள்
மிக அருமையாக இருக்கிறது தங்களின் ``மத்வாச்சாரியா தமிழ் மேகஸின்''. இதனை புத்தக வடிவில் காண ஆவலாக இருக்கிறேன். ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- ஸ்ரீ ஹரிகிருஷ்ணா, ஸ்ரீரங்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எப்போதெல்லாம் எனக்கு லிங்க் வருகிறதோ அப்போதெல்லாம் தவறாது படித்துவிடுவேன். ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. இதில், ``மகத்துவம் மிக்க மத்வ மகான்'' என்னும் பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதியாகும். சூப்பர் வாழ்க வளர்க்க.
- ரகோத்தமன், சென்னை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது. ஜோதிடத்தை யூக சாஸ்திரம் என்றுகூறும் கட்டுரை நூற்றுக்கு நூறு சரியே. இந்த ``மத்வாச்சாரியா தமிழ் மேகஸின்' எப்போது புத்தகமாக வரும்?" என்று தொடர்ந்து ஆசிரியருக்கு கைபேசி மூலமாக தொடர்புக்கொண்டு கேட்பது என் வாடிக்கை. அதற்கு அவரும் ``மிக விரைவாக ஆரம்பித்துவிடுவோம்'' என்று கூறுவார். அப்படி ஆரம்பிக்கும் போது, முதல் பிரதி எனக்குதான் ஓகேவா...!
- ஆர். பாலாஜி, திருச்சி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்லைனில் வருகின்ற ``மத்வாச்சாரியா தமிழ் மேகஸின்'' கட்டுரைகள் அருமையாக உள்ளது. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தினமும் பதிவிடாமல், என்றோ ஒரு நாள் திடீரென்று லிங்க் வருகின்றது. அதுமட்டும் தான் சற்று பின்னடைவாக உள்ளதாக நான் கருதுகிறேன். ஆகையால், தினமும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- வி. திவ்யா ராகவேந்திரன், ஸ்ரீரங்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 03.04.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக