ஆண்களுக்கு என பூஜைகள் உள்ளதா? / கேள்வி - பதில்


மாதர்கள் வழிபாட்டில் திருவிளக்கு பூஜை உள்ளதைப் போல ஆண்களுக்கு என்ன பூஜை உள்ளது?
   - ஆர்.உமா காயத்ரி, நெல்லை.

பெண்கள் செய்யும் அனைத்து பூஜைகளுக்கும் பக்கபலமாக துணைநிற்பதே ஆண்களின் கடமை ஆகும். இதுபோக ஆலயங்களில் நடக்கும் அனைத்து உற்சவங்களிலும் ஆண்கள் பங்கேற்று தங்களுடைய உடல் உழைப்பினை நல்க வேண்டும். ஆவணி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து 14வது நாள் ஆகிய சதுர்த்தசி திதி அன்று வரக்கூடிய அனந்த விரதம் என்கிற நோன்பு ஆண்களுக்கான பிரத்யேகமான விரத பூஜை ஆகும். இழந்த சொத்துக்களை மீட்க வேண்டி, தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டிய பூஜை என்பது இந்த அனந்தவிரத நோன்பின் சிறப்பம்சம் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------


நடராஜர், குழலூதும் கண்ணன் படம், சிலைகளை வீட்டில் வழி படக்கூடாது என்கிறார்களே, செல்வம் போய் விடுமாம்?

- சுரேஷ்குமார், ஸ்ரீரங்கம்.

சில விஷயங்கள் யாரோ ஒருவர் சொல்லி அதை மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ காலம் காலமாக பின்பற்றி வருவதாகவே இருக்கின்றன. குழலூதும் கண்ணன் படம் இருந்தால் எல்லாச் செல்வங்களும் வெளியே போய்விடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை எனக்குத் தெரிந்து பல செல்வந்தர்கள் வீடுகளில் நடராஜர் மூர்த்தியின் படத்தையும் குழலூதும் கண்ணன் படத்தையும் பார்த்திருக் கின்றேன். இது நம்முடைய மனதைப் பொறுத்தது பகவான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர் அருள் செய்யவே செய்வார். நம்முடைய இஷ்ட மூர்த்தி எப்படி இருந்தால் நமக்கு மன மகிழ்ச்சியைத் தருமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 04.04.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 / G.Mail Id: madhvacharyatv2023@gmail.com

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்