பெருமை வாய்ந்த பொள்ளாச்சி ராமர் / ராம - சீதா கல்யாணம் / ராம நவமி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற ராமர் கோயில் உள்ளது. பல மத்வ மக்களின் குலதெய்வமாக திகழ்கிறார். மேலும், சக்திவாய்ந்த அனுமன், ராகவேந்திரஸ்வாமி, விநாயகர் போன்றோர்களும் அருள்பாலிக்கிறார்கள். இந்த திருக்கோயிலில், வருகின்ற 06.04.2025 அன்று ``ஸ்ரீ ராம நவமி'' வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தேர் பவனி நடைபெறவுள்ளது. மேலும், 05.04.2025 அன்று ராம - சீதா திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்று ராமனின் அருளை பெறுங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக