சமயபுரத்தில் சித்திரைப் பெருந்திருவிழா / அனைவரும் வாரீர்...
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவை. வரும் 06.04.2025 முதல் 18.04.2025 வரை சித்திரை மாதம் பெருந் திருவிழா நடைபெறயிருக்கிறது. அதன் விவரங்களுடன்கூடி அழைப்பிதழையும், நடுநடுவில் சமயபுரத்தாளை பற்றிய தகவல்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.
மணல் மற்றும் களிமண்ணால், மருத்துவ மூலிகைகளைக் கொண்டு, உருவான மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக சமயபுரம் மாரியம்மன் கருதப்படுகிறாள். எனவே, மற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்வது போல் இவளுக்கு கிடையாது.
பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனாக ``மாவிளக்கு'' இடுகிறார்கள். அதாவது, தீராத நோய்கள் உதாரணத்திற்கு வயிற்று வலி இருப்பின் அது நிவர்த்தியாக மாவிளக்கு இடுகிறேன் என்று வேண்டிக்கொள்கிறார்கள். பிரச்சனைகள் தீர்த்தும், வயிற்றில் மாவிளக்கிட்டு வேண்டுதல் படி நிறைவேற்றுகிறார்கள். மாவிளக்கு என்பது, வெல்லம், அரிசி மாவு மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு உணவாகும். அதனை ஒரு இலை வைத்து அதன் மீது மாவிளக்கு வைத்து சிறிய தீபம் ஏற்றவேண்டும்.
அதே போல், உப்பு போல் நம் பிரச்சனைகள் அனைத்தும் கருக வேண்டுமென்று பக்தர்கள் பச்சை உப்பை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தாளை வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில், பழனிக்குப் பிறகு அதிக வருமானம் ஈட்டும் கோயிலாக சமயபுரம் உள்ளது.
18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மன்னர் இரண்டாம் விஜயராய சக்கரவர்த்தி இந்தக் கோயிலின் இன்றைய வடிவத்தைக் கட்டினார்.
மாரியம்மனின் அருள் தமிழ்நாட்டை தாண்டியும், அதாவது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்கள்கூட அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 04.04.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக