உலகிலேயே மிகப் பெரிய பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகம்!

248 டயர்கள் கொண்ட வாகனத்தில், தமிழ்நாட்டின் வந்தவாசியில் இருந்து ஒரு மிக பெரிய பெருமாள் சிலை பெங்களூர் நகரத்தை நோக்கி சென்றது மிகப் பெரும் பேசுபொருளாக தமிழ்நாட்டில் இருந்தது ஞாபகம் உள்ளதா? அந்த பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

பெங்களூரில், டாக்டர் சதானந்தா என்பவர் வசித்து வருகிறார். அவரது கனவில் பெருமாள் காட்சி கொடுத்து, எனக்கு விஸ்வரூபத்தில் மிக பெரிய சிலை செய்து ஆலயத்தை எழுப்புமாறு உத்தரவிட, தன் சொத்துக்களை விற்று செயலில் இறங்கினார்.

ரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ள,  108 அடி உயர, உலகிலேயே பெரிய விஸ்வரூப மஹாவிஷ்ணு, தற்போது பெங்களூரில் வேறு எங்குமே இல்லாத வகையில் விஸ்வரூப தரிசனம் தர தயாராகி வருகிறார். வரும் ஜூன் 2ம் தேதி, பெருமாளின் மஹா சம்ப்ரோக்‌ஷனம் மற்றும் பிரான பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற உள்ளது.

பெங்களூர், ஈஜிபுராவில்  இந்த உலகிலேயே பெரிய விஸ்வரூப மஹாவிஷ்ணு, தன் அழகிய தாமரை கண்களை திறந்து, நம்மை  எல்லாம் அருள் பாலிக்க தயாராகிவிட்டார். 

ந்த விதமான பெரிய பின்புலனும் இல்லாத டாக்டர் B சதானந்தா, இந்த பிரம்ம பிரயத்தினமான காரியத்தை, மிகப் பெரும் சவால்களை எதிர்கொண்டு செய்து முடித்துள்ளார். வருகின்ற 01.06.2025 அன்று, முதல் யாகசாலை துவக்கப்பட்டு, வேத கோஷங்கள் முழங்க, மந்திர பிராண ப்ரதிஷ்டைக்கான ஆகம சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். 

இந்த சரித்திர நிகழ்வில், உடுப்பி பலிமார் மடத்தின் மடாதிபதியான ஸ்ரீ வித்யாதீஷா தீர்த்தரும் மற்றும் ஜீயர்களும் பங்கு பெருகிறார்கள். நம் ஆன்மீக உள்ளங்கள் அனைவரும் இதில் கலந்துக் கொண்டு எம்பெருமானின் அருள் பெறுவது மிகப் பெரும் பாக்கியமாகும்.

அதை தொடர்ந்து, அடுத்த 45 நாட்களுக்கான ஆன்மீக சொந்தங்கள், மண்டல பூஜை அபிஷேக அர்ச்சனைகளில் பங்கு பெற்று, அவரவர் குடும்ப க்ஷேமத்திற்கும், தேச நலனுக்கும் பிரார்த்திப்பது மிக சிறப்பானதாகும்.


ந்த மகத்தான சேவையில் நீங்களும் பல வகையில் பங்கு பெறலாம். தகவலுக்கு திரு.ஸ்ரீகாந்த் அவர்களை 9884073394 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும், உங்களால் இயன்ற கைங்கரியம் செய்யுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 30.05.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்