நியாயமான கேள்வி... அனைவரின் மனதிலும் எழும் கேள்வி / கேள்வி - பதில்கள்
மேஷம் ராசி அன்பர்கள் விவசாயம் செய்ய போதிய மழை நீர்
கிடைக்காது என்கிறார்கள், அதே மகர ராசி நண்பர்கள் விவசாயம் செய்ய போதிய மழை
நீர் கிடைக்கும் என்கிறார்கள். மழையானது ராசியைப் பார்த்தா வரும்? மழை
பொழியும் ஒரு பகுதியில் யாருமே மேஷம் ராசிக்காரர்கள் இருக்கமாட்டார்களா
என்ன?
- ஆர்.சூரியன், நாகை.
உங்கள் சந்தேகம் நியாயமானதே. மழை என்பது
அந்தந்த நிலப்பரப்பின் மேல் எந்த கிரஹத்தின் தாக்கம் அந்த வருடத்தில்
அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் பொழிய வேண்டிய அளவினை தீர்மானம்
செய்யும் என்பது இகலோக ஜோதிடத்தின் அடிப்படை விதி. சுபகிரகங்களின் தாக்கம்
அதிகமாக இருப்பின் நல்ல மழை பொழிதல் என்பது இருக்கும். அது பொழியும்
இடத்தில் வசிக்கும் ராசிக்காரர்கள் யார் என்றெல்லாம் பார்க்காது என்ற
கருத்து உண்மைதான். அதே நேரத்தில் கிடைக்கும் மழை நீரை சரியான நேரத்தில்
சரியான அளவில் பயன்படுத்திக் கொள்ளும் திறன் என்பது ஒவ்வொரு
ராசிக்காரர்களுக்கும் அவரவர் கிரகநிலைக்கு ஏற்ப மாறுபடத்தானே செய்யும்.
இதைத்தான் அந்த ஜோதிடர் குறிப்பிட்டிருப்பார். மேஷ ராசிக்காரர்கள் மழை நீரை
சரியான அளவில் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவார் என்றும் மகர ராசிக்காரர்கள்
நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்பதும்தான் இதற்கான பொருளாகக்
கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 19.05.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக