லட்சக்கணக்கானோர் ஒன்றுக்கூடும் திருமலை பிரம்மோற்சவம் / அட்டவனை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஸ்ரீவாரி பிரம்மோற்சவம், 2025 கால அட்டவனை வெளியாகி உள்ளது. அதன் படி செப்டம்பர் 24, 2025 (புதன்கிழமை) முதல் அக்டோபர் 2, 2025 (வியாழன்) வரை நடைபெறுகிறது. முழு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 2025ல், அதிக மாசம் இல்லை, எனவே 1 பிரம்மோற்சவம் மட்டுமே இருக்கும். அதாவது சாலகட்லா பிரம்மோற்சவம் (சாலகட்லா என்றால் வருடாந்திரம்) மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒரே நேரத்தில் நடைபெறும்.

திருப்பதி பிரம்மோத்ஸவ அட்டவணை:


செப்டம்பர் 23, 2025 - செவ்வாய்

இரவு: மாலை 7 மணி முதல் 8 மணி வரை - அங்குரார்ப்பணம்

விஷ்வக்சேனர் ஆராதனை.


செப்டம்பர் 24, 2025 - புதன் - நாள் 1

பிற்பகல்: 3.30 மணி முதல் 5.30 மணி வரை - பங்காரு திருச்சி உற்சவம்

மாலை: சுமார் மாலை 5.45 மணி - துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்)

இரவு: 9 மணி முதல் 11 மணி வரை - பெத்த சேஷ வாகனம்

பெத்த சேஷ வாகனம்

செப்டம்பர் 25, 2025 - வியாழன் - நாள் 2

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - சின்ன சேஷ வாகனம்

மதியம்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை - ஸ்னபன திருமஞ்சனம் (அதாவது, உற்சவருக்கு அபிஷேகம்)

இரவு: 7 மணி முதல் 9 மணி வரை - ஹம்ச வாகனம்

ஹம்ச வாகனம்

செப்டம்பர் 26, 2025 - வெள்ளி - நாள் 3

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - சிம்ம வாகனம்

மதியம்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை - ஸ்னபன திருமஞ்சனம் (அதாவது, உற்சவருக்கு அபிஷேகம்)

இரவு: 7 மணி முதல் 9 மணி வரை - முத்யால பல்லகி வாகனம் (முத்யாபு பாண்டிரி வாகனம்)

சிம்ம வாகனம்

செப்டம்பர் 27, 2025 - சனி - நாள் 4

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - கல்ப விருக்ஷ வாகனம்

மதியம்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை - ஸ்னபன திருமஞ்சனம் (அதாவது, உற்சவருக்கு அபிஷேகம்)

மாலை: 7 மணி முதல் 9 மணி வரை - சர்வ பூபால வாகனம்

கல்ப விருக்ஷ வாகனம்

செப்டம்பர் 28, 2025 - ஞாயிறு - நாள் 5

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - மோகினி அவதாரம்

இரவு: மாலை சுமார் 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை - கருட வாகனம்

கருட வாகனம்

செப்டம்பர் 29, 2025 - திங்கள் - நாள் 6

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - அனுமந்த வாகனம்

மாலை: 4 மணி முதல் 5 மணி வரை - ஸ்வர்ண ரதத்ஸவம் (தங்க ரதம்)

இரவு: 7 மணி முதல் 9 மணி வரை - கஜ வாகனம்

அனுமந்த வாகனம்

செப்டம்பர் 30, 2025 - செவ்வாய் - நாள் 7

காலை: 8 மணி முதல் 10 மணி வரை - சூர்ய பிரபா வாகனம்

இரவு: 7 மணி முதல் 9 மணி வரை - சந்திர பிரபா வாகனம்

சூர்ய பிரபா வாகனம்

அக்டோபர் 1, 2025 - புதன் - நாள் 8

காலை: சுமார் காலை 6 மணி - ரதோற்சவம் (தேர், திருவிழா)

மாலை: 7 மணி முதல் 9 மணி வரை - அஸ்வ வாகனம்

அக்டோபர் 2, 2025 - வியாழன் - நாள் 9

அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை - பல்லகி உற்சவம் & திருச்சி உற்சவம்

காலை: 6 மணி முதல் 9 மணி வரை - சக்ர ஸ்நானம்

மாலை: சுமார் 7 மணி - த்வஜாவரோஹணம் ( பிரம்மோத்ஸவம் முடிந்தது)

சக்ர ஸ்நானம்

அக்டோபர் 3, 2025 - வெள்ளி - பாக் சவாரி உற்சவம்: அனந்தாழ்வார் தோட்டத்தில்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 16.06.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
----------------------------------------------------------------------------------------------------------------------------- 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்